நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Thursday, November 10, 2011

எல்லோரும் விரும்பும் தோழி

தோழி அவள் தொலைதூரத்தில் - இருந்தும்
கண்டு களித்திருப்போம் தினமும்
அதன் பின்னே கண்யர்வேன்

மொழியின்றி ஓளியின்றி என் இன்ப
துன்பங்களில் பங்கு கொள்ளும் தோழி
அலைப்பாயும் மனதினை அமைதியாகிடுவாள்
வார்த்தைகள் இன்றியே

மாதத்தில் இரண்டுநாள் காணமுடியாது அவளை - பின்
தினம் கொஞ்சம் என முகம்காட்டி பதினைந்தாம் நாள்
முழு அழகில் மயக்கிடுவாள் எனை பேசாமல் போவேனோ நானும்
இரண்டு நாளில் மீண்டும் கொஞ்சகொஞ்சமாய் மறைந்து காணமல் போவாள்

இது தொடரும் என்றாலும் அவளை காண
நான் மறுப்பதும் இல்லை அதற்காய் ஏங்க
மறப்பதும் இல்லை

எல்லோரும் விரும்பும் தோழி அவள்
கவிஞனுக்கும் ஓவியனுக்கும் காதலி அவள்
பிள்ளைக்கும் பிரியமானவள் அவள்
காதலர்களுக்கு தூது அவள்
அவளே இரவினை ஆட்சி செய்யும் "நிலா"