நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Friday, December 3, 2010

மச்சுபிச்சு மலை ரகசியம்


மச்சுபிச்சு மலை ரகசியம்



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

குவியல் குவியலாய் பெண் சடலங்கள்.. பூகம்பத்துக்கும் அசராத கட்டிடங்கள்..  தென்அமெரிக்க நாடான பெருவில் காடுகள் மிகவும் பயங்கரமானவை. மலைகள், நதிகள், பள்ளத்தாக்கு, அடர்ந்த மரங்கள், வழிமறிக்கும் கொடிகள், இலைச் சருகுகளுக்கு இடையே ஊர்ந்து மறையும் கட்டுவிரியன் பாம்புகள் என காட்சியளிக்கும் அந்த காட்டு வழியாக பயணிப்பது மிகவும் கடுமையானது. 1911ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிங்காம், மர்ம போர்வை அணிந்திருந்த காட்டுக்குள் ஆய்வுக்காக நுழைந்தார். மண்டிக் கிடந்த புதர்களுக்கு இடையே, மலைச்சரிவுகளில் செதுக்கப்பட்ட தளங்கள்.. அதில் கற்களால் கட்டப்பட்ட பிரமிக்க வைக்கும் கட்டுமானங்கள் தெரிந்தன. உடனே அதை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். புதர்களை அகற்றி ஆய்வுகளை தொடங்கினார். பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றி கிடந்தாலும் அவை சேதம் ஏதும் அடையாமல் பரிமளித்தன. நீண்ட ஆய்வுக்கு பிறகு மச்சுபிச்சு மலை அதிசயங்கள், அதில் மறைந்திருந்த ரகசியங்கள் குறித்து உலகுக்கு அறிவித்தார்.

பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா சாம்ராஜ்யம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த 1450&ம் ஆண்டில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகரான குஸ்கோ நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது. இதன் 3 புறமும் சூழ்ந்து பாயும் உருபாமா நதி மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா சக்கரவர்த்தி பச்சாகுட்டியின் மலை வாசஸ்தலம் எனவும், எதிரிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது.

சுமார் நூறு ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்த இன்கா சாம்ராஜ்யம் 1572&ல் சரிந்தது. பெரியம்மை தாக்குதல் மற்றும் ஸ்பானிஷ் படையெடுப்பால் இன்கா இனம் அழிந்து போனது. ஆனால் ஸ்பானிஷ் வீரர்களால் மச்சுபிச்சுவை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அது சேதப்படாமல் தப்பியது.
நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி பெரு. எனவே அங்கு வசித்த இன்கா மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத கட்டிடங்களை கட்டுவதில் திறமை மிக்கவர்களாக இருந்துள்ளனர். பெரிய வழவழப்பான சதுர கற்களை அடுக்கி முக்கிய கட்டிடங்களின் சுவர்கள் கட்டப்பட்டன. இவை நிலநடுக்கத்தின்போது குலுங்கினாலும் நொறுங்கி விழாமல் அசைந்து கொடுத்து, பின்னர் பழைய நிலைக்கே திரும்பி விடுமாம். இரு கற்களுக்கு இடையே ஒரு பிளேடுகூட நுழைய முடியாத படி கனகச்சிதமாக சுவர்களை அமைத்துள்ளனர். கதவு, ஜன்னல்கள் வளைவான முனைகளுடன் முக்கோண வடிவில் கீழிருந்து மேல் சரிவாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பல நில அதிர்வுகளை தாங்கி இன்றும் இந்த கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்கின்றன.

மச்சுபிச்சுமலை மையப்பகுதியில் இன்டிகுவாட்னா, சூரிய கோயில் மற்றும் 3 ஜன்னல்கள் அறை என 3 முக்கிய கட்டிடங்கள் உள்ளன. இதில் இன்டிகுவாட்னா இன்கா மக்களின் சூரிய கடிகாரம் மற்றும் நாள்காட்டி எனக் கருதப்படுகிறது. சூரியனை நோக்கி நடப்பட்டிருக்கும் இந்த கல் ஏற்படுத்தும் நிழலை வைத்து நேரம் மற்றும் நாட்களை அவர்கள் கணக்கிட்டனர். மச்சுபிச்சு மலையானது குடியிருப்பு பகுதி, விவசாய பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே பெரிய மதில் சுவர். விவசாய தளங்களில் நீரூற்றுகள், ஓடைகள் என திட்டமிடப்பட்ட பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. மச்சுபிச்சு மட்டுமின்றி அருகில் உள்ள மலைகளிலும் கட்டுமானங்கள், விவசாய தளங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே சாலை வசதியும் செய்யப்பட்டிருப்பது பிரமிப்பாக உள்ளது.

இந்நிலையில் பராமரிப்பின்றி விடப்பட்ட மச்சுபிச்சு மலை அடர்ந்த காடுகளால் மூடப்பட்டது. அதற்கு பின்னர் பல நூற்றாண்டுகள் அது வெளியுலகுக்கு தெரியாமலே இருந்தது. 1911&ல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பிங்காம் தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். அப்போதிருந்துமச்சு பிச்சு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தலமாகிவிட்டது. மச்சுபிச்சுவை பாதுகாக்கப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக 1981&ல் பெரு அரசு அறிவித்தது. 1983&ல் யுனெஸ்கோ அமைப்பு அதை உலக பாரம்பரிய தலமாக அறிவித்தது. 2007&ல் யுனெஸ்கோ நடத்திய வாக்கெடுப்பில் மச்சுபிச்சு மலை 7 உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்வானது. பெருநாட்டின் முக்கிய சுற்றுலா தலமாகியுள்ளது.

மச்சு பிச்சுவில் ஆய்வு நடத்திய பிங்காம் அங்கிருந்த விலை மதிப்பற்ற கோப்பைகள், வெள்ளி சிலைகள், நகைகள், மனித எலும்புகள் உள்பட ஆயிரக்கணக்கான பொருட்களை யேல் பல்கலைக்கழகத்துக்கு எடுத்துவந்துவிட்டார். தற்போதும் அவை யேல் பல்கலைக்கழத்திலேயே உள்ளன. அவற்றை பெருவிடம் திருப்பி அளிக்க யேல் மறுத்து வருகிறது. அவற்றை பாதுகாக்க பெருவில் போதிய வசதியில்லை என சாக்கு கூறி யேல் பல்கலை தட்டிக்கழித்து வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் மச்சுபிச்சு மலையில் கட்டிடங்களையும் சுவர்களையும் கட்ட இன்கா மக்கள் எங்கிருந்து கற்களை எடுத்துச் சென்றார்கள் என்பது இன்று வரையில் புதிராக இருக்கிறது. மேலும், மச்சுபிச்சு பகுதியில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெண்களுடையது. பெண்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. கொத்துக் கொத்தாக பெண்களை கொலை செய்ய என்ன அவசியம் வந்தது? மச்சுபிச்சு மர்மம் இன்றளவும் தொடர்கிறது.
நன்றி தினகரன்
& ப. இந்துமதி
மச்சுபிச்சு மலை ரகசியம்

Thursday, September 30, 2010

நட்பு

எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால
சிந்தித்துக கொண்டோம்!

முகங்களைப் பற்றி
யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து
நேசித்ததுமில்லை!

எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!

அவரவர் கருத்துக்களை
இடம் மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !

சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!

கவலைகளை
கிள்ளி அறிவோம்!
இலட்சியஙகளை
சொல்லி மகிழ்வோம்!

உழைப்பை பெருக்க
உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க
நம்பிக்கை தருவோம்!

நன்மைகள் வளர
முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து
சாதிப்போம்!

Monday, September 27, 2010

சூரிய சக்தி உளவு விமானம்

ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு விமானம் ஒன்றை போயிங் நிறுவனம் தயார் செய்துள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் தயாரிக்க போயிங் நிறுவனத்திடம் அமெரிக்க ராணுவம் ஆர்டர் கொடுத்தது.

சோலார் ஈகிள் என்ற பெயரில் உளவு விமானத்தை தயாரித்துள்ள போயிங் விமானம் அதை பரிசோதித்து வருகிறது. இந்த விமானம் நிற்காமல் விண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்குமாம்.

இந்த விமானத்தின் இறக்கையில் உள்ள சோலார் தகடுகள், பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும். இதன் மூலம் விமானத்தின் எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் புரொப்பலர்கள் இயங்கும். வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து, படங்கள் மற்றும் உளவுத் தகவலை தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த விமானம் அனுப்பிக் கொண்டிருக்கும்.

முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் விமானம், 30 நாள் நிற்காமல் பறக்கவுள்ளது. இந்த சோலார் ஈகிள் விமானம் 2014ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது

செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம்


இனி நாம் கொஞ்சம் அறிவியலும் தெரிந்து கொள்வோமா?


செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும். அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். 30 நாட்களில் காய்த்து குலுங்கத் துவங்கும். ஒரு ரோபோவை பூமியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கி, நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் தோட்டத்தைப் பராமரிக்க முடியும். இவ்வாறு ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார்கள் விஞ்ஞானிகள்.

யோகா

லண்டன்:பின்லாந்து நாட்டில் உள்ள மிருகக் காட்சி சாலையில் பனிக்கரடி ஒன்று தினமும் 15 நிமிடங்கள் யோகா செய்கிறது. இதை பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.பின்லாந்து நாட்டில் உள்ள அட்டாரி மிருகக் காட்சி சாலையில், "சான்ட்ரா' என்ற ஆண் பனிக்கரடி ஒன்று உள்ளது.அந்த கரடி தினசரி காலை எழுந்ததும், 15 நிமிடங்கள் யோகா செய்கிறது. அது கால்களை நீட்டியும், கைகளை தரையில் ஊன்றியும், கண்களை ஒரே இடத்தில் நிலை நிறுத்தி யோகா செய்கிறது. பின்னர், கால்களை உயர்த்தி, கைகளால் காலை தொடுகிறது. பின்னர், கால்களை உயரே தூக்குகிறது. பார்வையாளர்களை வியக்க வைக்கும் வகையில், பல்வேறு கோணங்களில், கரடி செய்யும் இந்த யோகா பயிற்சி 15 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.இந்த அரிய காட்சிகளை பார்ப்பதற்கு, அந்த மிருகக் காட்சி சாலையில் தினமும் பெரும் கூட்டம் கூடுகிறது. ஆன்மிகம் சார்ந்த உடற்பயிற்சியான யோகாவை, கரடி எப்படி கற்றுக்கொண்டது என்றும், அதைப் பற்றி அதற்கு என்ன தெரியும் என்றும் பார்வையாளர்கள் வியப்போடு கேள்வி எழுப்புகின்றனர்.

Friday, September 17, 2010

ஏன்

இரண்டு வயதிலையே ,
எட்டி சென்றுவிட்டது மகிழ்ச்சி,
களவுப்போய்விட்டது கள்ளமில்லா புன்னகை,
பள்ளி சுமையால்,
ஏன் கண்டுகொள்ளவில்லை என் பெற்றோர்கள்?

Thursday, September 2, 2010

அதிசயம்

சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.

குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை'என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.

தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.

ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்

Wednesday, September 1, 2010

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்காக - 4

படம்: ஜெய்ஹிந்த்
பாடல்: தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றேன்றோ
தேகம் பலவாகும்
நம் இரத்தம் ஒன்றல்லோ
பாசைகள் பலவன்றோ
தேசம் ஒன்றேன்றோ
பூக்கள் கொண்டு வந்தால்
புண்ணிய தேசமடா
வால்கள் கொண்டு வந்தால்
தலையை வாங்கிடும் தேசமடா
எங்கள் இரத்தம்
எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்த எங்கள் ஸ்ரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே

தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால் தான்
வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
சக்தி இருந்தால் தான்
சரித்திரம் உண்டாகும்
சட்டம் கயிறு கொண்டு
நீ ஈடுபிடித்து விடு
சரியா இல்லை என்றால்
அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக
புயல் போல் விரைக
அட இளைய இரத்தம் என்ன போலியா
எழுத வேண்டும் புதிய இந்தியா

சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

Friday, August 27, 2010

மனதைத் தொட்ட உண்மைக் கதை

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
ரெடி, ஸ்டார்ட், கோ
விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.
ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.
அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.
அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
"இப்போ வலி போயிடிச்சா"
அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.
பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கிணார்கள்.
பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடிணார்கள்.
அதை பார்த்த விழா குழுவினரும்,பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டிணார்கள்.கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.
ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை.
அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.
அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.
ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.
ஆணல் குணத்தால்?
இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?
மனித ஒற்றுமை
மனித நேயம்
மனித சமத்துவம்.
வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.
நம்மில் பலர் இதை செய்வதில்லை.
ஏன். நமக்கு மூளை இருப்பதணால்.
அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.

ஒரு தந்தையின் கடிதம்

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

ஆசிரியர்

விண்ணில்
உயர பறக்கும் விண்கலம் என்னும் மாணவனை,
அதை இயக்கிய,
ஆசிரியன் என்னும் விஞ்ஞானி,
விண்ணை தொடும்
அதன் வளர்ச்சி என்னும் உயரத்தை
கீழிருந்தே ரசிக்கிறான் ...

பொதுநலத்திலும் ஒரு சுயநலம்

விழி கொடுத்தால் வழி கொடுக்கும் இருவருக்கு
இப்போது பொதுநலத்திலும் ஒரு சுயநலம்
இறந்த பின்பும் உலகை ரசித்து
கண் தானம் செய்வோம் கடவுளை காண்போம்...

Thursday, August 26, 2010

தங்கை

கோடி நட்சத்திரங்களும் கண்
சிமிட்டி சிரித்து கொண்டிருந்தது
அருகில் தங்கையாய்.

Wednesday, August 25, 2010

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்காக - 3

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு….
கருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு ..
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் ..
வாழ்ந்து விடை பெறுவோம்…

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்……….
எனக்கென்றும் குறைகள் கிடையாது
ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..உக்க்.. ஒக்க்.

ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ….
.அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் … நேரம் .வரும் போதும் சிரிப்பினில் …
நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

.. நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்… மேகங்கள் ……
இடங்களை பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இலையுதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்…
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்……….
முடிவதும் பின்பு தொடர்வதும்……..
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே..
…. கேளடி……

Tuesday, August 24, 2010

பரிசு

ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் ஒரு பரிசு தருகிறார்
தாய்க்கு ஒரு பாசமான பிள்ளை ,
தந்தைக்கு  ஒரு பொறுப்பான பிள்ளை,
தங்கைக்கு ஒரு நல்ல தமக்கை ,
தம்பிக்கு ஒரு நல்ல அண்ணன் ,
கலைஞருக்கு மக்களின் பாராட்டு ,
ராணுவவீரனுக்கு மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்,
எனக்கு உன்னையும்,உன் நட்பையும் தந்திருக்கிறார்,
அதை நான் என்றும் உயிர் போல் காப்பேன்.

Thursday, August 19, 2010

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்காக - 2

ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனெய்
நம் பேரில் திசைகளை எழுதலாம்
கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்கை பாடதில் முதல் வரி
இந்த உலகில் மிக பெரும் ஏழை
நண்பன் இல்லாதவன் ஹெய்

(ஒரு நண்பன் இருந்தால்...)

தோழ் மீது கை போட்டு கொண்டு
தொன்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்
ஒருவர் வீட்டிலே படுது தூங்கினோம் நட்பின்
போர்வைக்குள்ளே
இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே

தோழன் என்ற சொந்தம் ஒன்று
தோன்றும் நமது உயிரோடு

(ஒரு நண்பன் இருந்தால்...)

நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள
எண்ணங்கள் எண்ணகள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம்
நமது மேஜையில் உணவு கூட்டணி அதில் நட்பின் ருசி
அட வாழ்கை பயணம் மாறலாம் நட்பு தான் மாறும?
ஆயுள் காலம் தேர்ந்த நாளில்
நண்பன் முகம் தான் மறக்காதெய்

(ஒரு நண்பன் இருந்தால்...)

Tuesday, August 17, 2010

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்காக

திரைப்படம்:   ஆனந்தம்
பாடல்:   அச்சை ஆசிய
பாடகர்கள்:   K.J.யேசுதாஸ்
இசை:   SA. ராஜ்குமார்
பாடல் ஆசிரியர்:   Kalaikumar


ஆசை ஆசையாய் இர்ருகிறதே
இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகிற இன்பம்
அந்த ஸ்வர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் எண்ட்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்

ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ்

ஆசை ஆசையாய் இர்ருகிறதே
இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

நம் தாயின் முகதில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்திடுவோம்
டீபங்கள் கோடி நம் வீட்டில் ஏட்றி
கொவிலை போல மாட்றிடுவோம்
அன்னைக்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரதிலும்
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்
அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே

ச ரி ப ம க ரி ச ரி ச நி ச
ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ்

ஆசை ஆசையாய் இர்ருகிறதே
இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

பல நூறு வண்ணம் ஒண்ட்றாக சேரும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வது போல வாழ்ந்திருப்போம்
எங்களுகுள்ளே வளைந்திடுவோம்
நானலை போல் தானே
ஓட்ட்றுமை காதிட நிண்ட்றிடுவோம்
தூங்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும் சந்தோஷம்

ச ரி ப ம க ரி ச ரி ச நி ச
ச ரி ப ம க ரி ச ரி ச நி ச

ஆசை ஆசையாய் இர்ருகிறதே
இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடேஸ்

நம்மை காணுகிற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகிற இன்பம்
அந்த ஸ்வர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் எண்ட்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்

ச ரி ப ம க ரி ச ரி ச நி ச
ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ்
ச ரி ப ம க ரி ச ரி ச நி ச

ச ரி ப ம க ரி ச ரி ச நி ஸ்

ச ரி ப ம க ரி ச ரி ச நி ச

Wednesday, August 11, 2010

நண்பன்

நண்பா,
உன் முகம் கண்டதில்லை,
உன் குரல் கேட்டதில்லை,
கணினியின் திரையில் - உன்
எழுத்துகளை கண்டதும் - என்
முகத்தில் ஒரு பிரகாசம்
இதுதான் நட்பின் மகத்துவமோ?

உலகத்தை பற்றி அறிய வேண்டும்
என்று கூறி செய்திகள் படிக்க அறிவுருதினாய்,
நல்லதுகள் பலவும் - நீ
கற்றுகொடுதாய்,
பொதுஅறிவு கேள்விகள் கேட்டு
என் அறிவை வளர்த்தாய்,
இன்னும் எத்தனையோ செய்தாய்,

நீ செய்ததற்கு நன்றிகள் கூறி - உன்னையும்
நட்பையும் இழிவுபடுத்த விரும்பவில்லை
என் உயிர் நிலைக்கும் வரை - என் மனதில்
என்றும் உயர்ந்த இடத்தில நீ இருப்பாய்.

என்ன செய்வது ?

அன்பு காட்ட தாயாய்,
அடித்து திருத்த தமக்கையாய்,
ஆடி,பாடி விளையாட தங்கையாய்,
அதட்ட அத்தையாய்,
அரவணைக்க சித்தியாய்,
அடுத்த தாயாய்,
அவன் வாரிசை சுமக்க மனைவியாய்,
பெண் வேண்டுமாம்.
ஆனால் அவள் சுமக்கும் வாரிசு பெண்ணாயாய்,
இருந்தால் மட்டும் வேண்டாமாம்.
இவர்களை என்ன செய்வது?

Thursday, August 5, 2010

தந்தை

தன்னிகற்ற தந்தையே!

நான் தாயின்  வயிற்றில் கருவான பொழுதே
தியாகங்களை முதலாக்கினீர்

நான் பிறந்த கணமே ‍‍‍‍‍‍‍- உங்கள்
உழைப்பை மிகுதியக்கினீர்

நான் நடக்க ஆரம்பித்ததும் - உங்கள்
உழைப்பை இன்னும் பண்மடங்ககினீர்

நான் பள்ளியை அடைந்ததும்  - உங்கள்
அறிவை என் முதல் ஆசானாகினீர்

அடுத்தது நீர் செய்தது உத்தமம் -‍ "தோலுக்கு
மீறிய பிள்ளையை தோழனாய் தன் பார்ப்பேன்" என்று
என்னை உமக்கு தோழனாக்கினீர்

நான் தோல்வி கண்டு துவண்டபொழுது ‍‍- ஆறுதல்
மொழிக்கூறி ஊக்கப்படுத்தினீர்

என்னை சான்றோர்கள் பலர் போற்றும்
மனிதனாக்கினீர்

தன் பிள்ளை கடனாளி ஆககூடாது - என்று
உழைத்து சொத்துகள் சேர்த்தீர்

ஆனால் இன்று நான் கடனாளியாகத் தான் இருக்கிறேன்
உமது தியாகத்தின் முன்பு.

Friday, July 30, 2010

வணக்கம்

நான் புதிதாக இந்த blog  உருவாக்கி உள்ளேன். எனது நண்பர்களான நீங்கள் இந்த blog கிற்கு அதரவு தருவிர்கள்  என நம்புகிறேன்.
                           
                                                                     நன்றி.