நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Wednesday, August 31, 2011

காற்று

http://image.shutterstock.com/display_pic_with_logo/498835/498835,1283270447,3/stock-photo-beautiful-blond-baby-girl-with-wind-in-her-hair-60105100.jpg
கோபம் கொண்டவனையும்
குழந்தை ஆக்குகிறாய்
ஆர்பரிக்கும் மனதை
அமைதியாக்குகிறாய் - காற்றே
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது?


 

இனிய பள்ளி காலம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvfd8iKDPkHC_yuIrGCOk09S_XzC8ScHcRGNGcbS5RSK3tRe-DwLbLaJWutuhxEAk2zIUmF-KPPF64DTGKxMbEcq2OmK5h8ydEy9pCWfmRZuXLXyUzEdT6Zt8NRD8c8N0rhhfKxDfpEJA/s400/pic4.JPG

ஐந்து மணிக்கு எழுந்து புத்தகம் எடுத்து
ஆறுமணிக்கு குளித்து - அன்னையிடம்
திட்டுவாங்கி தலைசீவி சாப்பிட்டு பைதூக்கி
பள்ளி செல்வதற்குள் மணியாகும் ஓன்பது

பள்ளி சென்று உற்ற தோழியிடம்
காலை நடந்த கதை தனை
உரைத்து கலகலவென நகைத்து
கலைத்திடுவோம் கவலைகளை

ஆசிரியரிடம் ஆசிபெற்று - சில சமயம்
அடியும் பெற்று - அத்தனையும்
அப்பொழுதே மறந்து மீண்டும்
துவங்கும் எங்கள் குறும்பு

நினைத்ததை நினைத்தபடியே பேசி
நில்லாமல் கால்கடுக்க ஓடிய நாட்கள்
அடுத்தவர் உள்ளம்  மட்டுமல்ல
கள்ளமும் அறியா அந்த காலம்

திரும்பாத இனிய பள்ளி காலம்
திரும்பிடவே வரம் கேட்டு கடவுளிடம்
ஏங்கி  நிற்குது இந்த பேதை மனம்.


Friday, August 12, 2011

தந்தை

அப்பா,
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு
இந்த ஒரு வார்த்தையில்,
ஈன்ற பொழுதிலிருந்து நீங்கள் எனகளிக்கும் அன்பு
உலகம் வியக்கும் படியான
ஊர் புகழும் படியான முன்னேற்றதிற்கு
என்னை எடுத்து செல்லும்
ஏணி படிகள் - அவரது
ஐம்புலனும் எனக்காகவே
ஒன்றினைந்து செயல்படும் - நான்
ஓங்கி உயர ஒய்வுல்லாமல் பாடுபடும்
இத்தனை செய்தும் சொல்வார்" நான்
என்ன செய்தேன் என் பிள்ளை தான்
கஷ்டபட்டாள்". இன்னும் ஓராயிரம் இருக்கிறது
தந்தையே! நின் புகழ் கூற - அந்த 
தமிழன்னை மட்டும் ஒத்துழைத்தால் போதும்
தந்தையர் புகழ் பாடிடுவேன் தினமும்.

Tuesday, August 9, 2011

நட்பு


இன்பத்தைபகிர்ந்துஇனிப்புகொடுக்கும்
துன்பத்தை போக்க தோள் கொடுக்கும்.

தோழி


http://3.bp.blogspot.com/_iTwpjOELp_0/SVRAsutqoOI/AAAAAAAABpI/eRSXLrJEs8Y/s400/angel-babies-photos-02.jpg


இன்பமானாலும்,துன்பமானாலும் பகிர்ந்து கொள்வது
அவளிடமே!

சோதனையானாலும்,சுகமானாலும் முதலில் சொல்வது
அவளிடமே!

வெற்றியானாலும்,தோள்வியானாலும் தோள் வேண்டுவது
அவளிடமே!

தொலைதூரம் சென்றப்பிறகும் என் வெற்றிக்களுக்கு வரும் முதல் வாழ்த்து
அவளிடமிருந்தே!

இன்றும் தோல்வி என்றால் முதல் வரும் ஆறுதல்
அவளிடமிருந்தே!

இனி நான் பெறப்போகும் வெற்றிக்கும் வரும் முதல் வாழ்த்தும்
அவளிடமிருந்தே!