ஒன்றும் அறியா சிறு புழுவை
பள்ளி என்னும் கூட்டில் வைத்து
நல்லவை பல கற்று கொடுத்து
வண்ண சிறகுகள் அளித்து
வானில் பற என்று அனுப்பிவைத்தால்
மீண்டும் கூட்டில் புகவே ஏங்குகின்றன
வண்ணத்துப்பூச்சிகள்.
இறைவா நின் கருணையை
என்னவென்பது இந்த பேதையை
காக்க மறு உருக்கொண்டு வந்தாயோ
என் தாயாய்.