நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Tuesday, October 25, 2011

தீபாவளி

நரகாசுரனை அழித்த நாளாம் தீபாவளி - நாமும்
அழித்திடுவோம் மனதிலுள்ள நரகாசுரனை - அதற்கு
சான்றாய் வெடித்திடாதீர் வெடிகளை - புகையில்
நரகாசுரன் தோன்றி அழிக்க வருவான் பூமியை - ஆகவே
தீபம் ஏற்றி தீங்கில்லாமல் தீபாவளியை கொண்டாடுவோம்

தீபங்கள் ஓளிரட்டும்
தீபாவளி மிளிரட்டும் - உங்கள்
வாழ்க்கை பிரகாசிக்கட்டும்

அனைவருக்கும் எனது "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

Friday, October 21, 2011

யாரலும் மாற்ற முடியாது

வருத்தம் போக்க வந்தவளே!-என்
வாழ்வின் ஓளியானவளே!-நான்
உன்னை முதலில் கண்ட பொழுது என்னை
நோக்கி சிந்தினாயே ஒர் புன்னகை அது
இன்னும் என் நெஞ்சு கூட்டில் பத்திரமாய் இருக்கிறது
நினைத்தாளே பரவசம் தருகிறது - ஏனோ
நீ திட்டும் போதும் வலிப்பதில்லை - நீ
முகம் சுருக்கினால் தான் வலிக்கிறது - நீ
எனக்காய் தேர்தெடுக்கும் ஒவ்வொன்றும் ஆகிறது என் பொக்கிஷங்களாய்
நீ சொல்லும் 'அக்கா' என்னும் ஒர் சொல்லுக்காய் ஏங்கினாலும் - நீ
பெயர் சொல்லி அழைக்கும் போதும் அதே சுகம் கிட்டத்தான் செய்கிறது
யாருக்கு தெரியும் என்னைவிட அதிகம் உன்னைப்பற்றி - நீ என்
தங்கையானாலும் நான் உன் தாயே,நீ என் சேயே - இதை
யாரலும் மாற்ற முடியாது.

Tuesday, October 11, 2011

ஏன் பிறக்காமல் போனாய்?

அன்பாய் அண்ணா என்று அழைக்க
அதுவே மிகுதியாகையில் "டா" என்று உரிமையோடு அழைக்க
சிறுவிரல் பிடித்து நடக்க வைக்க
என் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளிக்க
சமத்தாய் பள்ளி அழைத்து செல்ல
சிறுவயதில் மிட்டாய் வாங்கிதர அண்ணன் இல்லையேன்ற வருத்தம் தீர்க்க
எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பதில் உதவ
பெண்பிள்ளைகள் தானே என்ற சொந்தங்களின் ஏளனத்தை தகர்க்க
இன்னொரு தாயாய் தங்கை இருக்க
தந்தையின் மறு உருவாய் நீ ஏன் பிறக்காமல் போனாய்?

ஆனந்த கண்ணீர்

தாயும் சேயாய் மாறி மடிசாய்ந்து
கண்ணீர்விடுகையில் அவள் கண்ணீரும் இனிக்கிறது
இன்னும் அழவைக்க ஆசையும் பிறக்கிறது.

Tuesday, October 4, 2011

யார் நீ?

வாழ்கை முழுவதும் கூட வந்தது
கனிவாய் கவனித்து கொண்டது
இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டது
நான் அதனிடம் கேட்டேன்"நீ யார்?
எனக்கு ஒன்றேன்றதும் துடித்து போனாயே
நீ என் தாயா?
அதட்டி அறிவுட்டினாயே நீ என் தந்தையா?
தவறு செய்தபோது திருத்தினாயே நீ என் தமையனா?
எனக்காய் விட்டு கொடுத்தாயே நீ என் தமக்கையா?
சரிக்கு சரியாய் சண்டையிட்டாயே நீ என் தம்பியா?
எனக்காய் வாதடுவாயே நீ என் தங்கையா? "என்று
"நீ மேற்கூறிய அனைத்திற்கும் என் ஓரே பதில் இல்லை"என்றது
"பின் நீ யார்?"என்றேன் "நட்பு" என்றது.
எல்லா உறவுகளையும் உணர்வுகளையும் அதனுள் கண்டேன்
உண்மை உணர்ந்தேன்.

நட்பு

விட்டுகொடுத்தலும்,விரும்பிகேட்டலும் மட்டுமல்ல
விழும்போதும் விரிசல் அடையாதிருத்தலும் - வாழ்க்கை
முடியும் போதும் முடியாதிருத்தலே
நட்பு.

Monday, October 3, 2011

இன்னும் ஒன்று

பத்து திங்கள் எனை சுமந்து
உயிர் போகும் வலி பொறுத்து
எனக்காய் என்னை ஈன்றேடுத்து
நித்தம் நித்திரையின்றி எனை காத்து
அழியா செல்வமாம் நல்கல்வி கொடுத்து
ஊர் புகழ நல் ஓழுக்கம் கொடுத்து
சான்றோர் போற்ற உயர் பண்பு கொடுத்து
நான் அழுதால் நீ அழுது, நான் சிரித்தால் நீயும் சிரித்து
இத்தனை ஆண்டுகள் என்னை சீராய் வளர்த்த - என்
அன்னையே! இத்தனை கொடுத்த உனக்கு நான் என்ன
தர இயலும் எனது அன்பினை தவிர - எனக்காய் இன்னும்
ஒன்று கூட கொடுத்து விடு தாயே - வரும் பிறவியில்
நான் உந்தன் தாயாய் இருக்க.

மாறிவிட்டேன் நான்

மகனே!
நான் உன்னை பள்ளியில் சேர்த்தேன்
நீயோ என்னை மூதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டாய்
அன்றும் சரி இன்றும் சரி உன்னிடம் மாற்றம் ஏதுவுமில்லை
நான் மட்டும் தான் மாறிவிட்டேன் - நீ
இன்று போல் அன்றும் கண்கலங்காமல் கையாட்டிவிட்டு சென்றாய்
நானும் இன்று போல் அன்றும் கண்கலங்கினேன் தான் - ஆனால்
அன்று"எத்தகைய பிள்ளையை பெற்றிருக்கிறேன்" என்று
இன்றோ"இத்தகைய பிள்ளையை பெற்றேனே"என்று