நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Saturday, February 26, 2011

பட்டாம்பூச்சி

http://farm4.static.flickr.com/3292/3040860716_8a8b54654f.jpg
கவலை கொண்டிருந்தேன் பட்டாம்பூச்சியை
பார்த்து கற்றுகொள் என்றனர்  - என்ன
கற்றுகொள்ள வேண்டும் புரியவில்லை எனக்கு
பட்டாம்பூச்சியிடம் கேட்டேன் ''உண்டோ
கவலைகள் உனக்கு?''என்று
பட்டாம்பூச்சி சொன்னது''எனக்கும் உண்டு
கவலைகள் உலகத்தினர் ரசிக்கும் என்னழகை நான்
பார்க்க இயலவிலையே,அதுவும் நல்லதிற்கே அதிலுள்ள
குறையும் எனக்கு தெரியாதே'' என்று பறந்துவிட்டது
நாம் உண்மையில் கற்று கொள்ளத்தான் வேண்டும்  - அதன்
குறையை கூட நிறையாய் மாற்றும் வித்தையை.

Thursday, February 10, 2011

தேவதை


 http://cdn.activedesktopwallpapers.com/wallpapers/2610/Cute-Baby-Looking-Up-512X384-2610.jpg


தன் பிஞ்சு கால்களால்
எனை உதைத்து
கலுக்கேன்று சிரித்து
என் உள்ளம்
கொள்ளை கொண்டால்
என் தங்கை எனும் தேவதை.

கிருத்திகா

கடவுளிடம் வரம் கேட்டேன்
தாய்,தந்தை அல்லாது என்னிடம்
அன்புகாட்ட ஓர் உயிர் வேண்டும் என்று
கடவுள் சொன்னார்
அன்னைக்கு நிகராய் அன்பு காட்டி
தந்தைக்கு நிகராய் அறிவு புகட்டி
உனக்கு நிகராய் சண்டையிட்டு
அவளாய் வந்து சமாதானமும் செய்வாள்
அவளை அனுப்பிவைக்கிறேன் என்று
அவளும் வந்தாள் கிருத்திகா என்ற பெயரோடு

என் தங்கைக்காக நான் எழுதியது.