நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Friday, February 3, 2012

Request

ஃப்ரண்ட்ஸ்,

நானும் கதை எழுதறேன்னு விளையாட்டுக்கு ஆரம்பிச்சேன்........
அதுல முழுமையா ஈடுபட வைச்சது உங்க எல்லோரோட கருத்துகள் தான்.....
அதுக்கு ரொம்பபபபபபபபபபபபபப நன்றி பா......
இதோ முழுசா கதை (முடியாம) முடிச்சுட்டேன்...... நான் என்னென்ன மேம்படுத்திகனும்னு சொல்லுங்க பா .....pls.......

உங்க கருத்துக்காக காத்துகிட்டு இருக்கேன்....

அமைதியான வாசகர்களே...... இப்பவாவது cmt பண்ணுங்க பா.....

நான் என்பதே நீயல்லவா - 25

" இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துகோ ...... அதுகப்பறம் நான் சொன்ன மாதிரியே ..... உன் கண்ணுல கண்டிப்பா படமாட்டேன்........ உன் இஷ்டபடி உன் வாழ்கைய அமைச்சுகோ........" என்று விட்டு அவள் முகம் பார்த்தான் சரண்.

பொதுவாகவே உத்ராவிற்கு லேசில் கோபம் வராது, பேசுவர்களின் நிலையில் தன்னை வைத்து பார்த்து சமாதானம் செய்துகொள்வாள். ஆனால் , ஒரு விஷயத்திற்கு கோபம் வந்தது என்றால் பின் சமாதானம் செய்வது கடினம். இப்போதும் அப்படியே........


அவன் சொல்லி முடிக்கவும் அவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ?....... வேகமாய் அவனை நெருங்கியவள், இரண்டு கைகளாளும் அவன் சட்டையை பிடித்து உலுக்கி

"என்ன டா நினைச்சுகிட்டு இருக்க? பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிகலாம்னு சொல்லுவ..... சரிங்கனும்.... அப்பறம் சந்தேகப்பட்டு பேசுவ ..... சகிச்சுகனும்....... அப்பறம் சாரி கேட்ப...... லவ் பண்ணறேன் சொல்லுவ.. அதுக்கும் சரி தெரியாம செஞ்சுட்ட யோசிக்கறப்ப ........ கல்யாணத்த நிறுத்திடறேன்னு சொல்லிட்டு போய்டுவ....... அதையும் சரினு ஒத்துகனும்....... அப்பறம் வந்து தாலிகட்டி கூட்டிட்டு வருவ......... உனக்கு கழுத்தநீட்டிட்டு உங்கூட வரனும்.......... இப்போ கொஞ்சநாள் இருந்துட்டு உன் வழிய பார்த்துட்டு போனு சொன்னா........ சரி னு பெட்டிய தூக்கிட்டு போய்டனுமா?.........." கோபம் மிகுதியாக அவனது கன்னத்தில் ஒரு அறை விட்டவள்( இது நீங்க கேட்டதுக்காக பா....)

"எப்பவாவது என்ன பேசவிட்டயா?......... நீயே பேசி ..... நீயே முடிவு எடுத்துட்டு அதுகான தண்டனைய மட்டும் எனக்கு தர............. என்னய சொல்லனும் ....... உன்ன போய் உருகி... உருகி ... லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் இல்ல ........ இதுவும் வேனும் இன்னமும் வேணும்......" சட்டையை விடுவித்தவள் கண்களில் நீர் வழிய தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.சிறிது நேரம் கண்ணீர்விட்டவள்

" இப்ப சொன்ன பாரு என் கண்ணுல பட மாட்டேன்னு ..... அத செய் ..... இனி நான் உன்ன பார்க்க கூடாது...... பார்த்தேன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் போடா போ........" என்று கத்திவிட்டு அறையைவிட்டு வெளியேறினாள்.


சரணுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.... , அவள் சட்டையை பிடிக்கும் போது அதிர்ச்சியில் நின்றவன் அவள் பேச பேச அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனது காதுகள் தன் வேலையை செவ்வன செய்தாலும், மூளை அதை ஏற்க தாமதமானது. அவள் சென்று வெகு நேரத்திற்கு பிறகு தான் அவள் அடித்ததே உரைத்தது அவனுக்கு, அவள் பேசியதின் அர்த்தம் புரிய, துள்ளிகுதித்தான் அவளை தேடி கண்கள் அலைந்தது. அறை விட்டு வெளியே வந்து வீடெங்கும் அவளை தேடியும் அவளை காணவில்லை. ஒரு யூகத்தில் மாடிக்கு சென்றான், அங்கு அவள் இருட்டை வெறித்தபடி அழுது கொண்டிருந்தாள். அருகில் சென்றவன் தோளைப்பற்றி திருப்பினான். அவனது கைகளை தட்டிவிட்டாள், அவன் விடாது திருப்பி, அவளது முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டு

" சாரி மா........... சாரி.........." என கோபத்தோடு முகத்தை திருப்பிகொண்டாள்.

மறுபடியும் தன்பக்கம் அவளை திருப்பியவன் இறுக அணைத்துகொண்டான். முதலில் திமிறியவள் பின் அழுகையோடு அவனிடம் ஒன்றினாள். மனம் லேசாகும் வரை அழுதுமுடித்தவள் அவனிடமிருந்து விலக, சரண் இன்னும் இறுக்கிகொண்டான். சிறிது நேரம் கழித்து விடுவித்தாலும் தன் கையணைப்பிலேயே நிறுத்திகொண்டவன், அவள் முகத்தை நிமிர்த்தி கன்னத்தில் இதழ்பதித்தான், அவள் முகம் ரத்த சிவப்பிற்கு மாற , மீண்டும் மீண்டும் முத்தமிட்டு அவளது வெட்கத்தை ரசித்தான்.

"போதும்........... போதும்...... எனக்கு வலிக்குது இல்ல...." என்று சினுங்கிய உத்ராவிடம்

" இதுக்கே இப்படி சொன்னா எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்குல்ல........" என்று கண்ணடிக்க அவள் அவன் மார்பில் செல்லமாக குத்தினாள்.

" ஆ........... " உண்மையாக வலிப்பது போல பாவனை செய்ய, பதறியவள் தடவிட்டு கொண்டே

"வலிக்குதா........" என

"இங்க இல்ல இங்க......" என்று கன்னத்தை காண்பித்தான். முறைத்துகொண்டே

"நீங்க பேசினதுக்கு அறையோட விட்டேனேனு சந்தோஷபடுங்க......." என

" சாரி டா........ என்னவோ பேசி கஷ்டபடுத்திடேன் இல்ல........ "

"................."

" நீ கஷ்டபடுறயோனு நினைச்சு தான் அப்படி சொன்னேன்......"

" கஷ்டபடுறவ தான் கல்யாணம் நின்னுபோகாமா இருக்க எல்லாத்தையும் செய்வாளா?....." அவளை ஆச்சரியத்தோடு பார்த்தவன்

"ஏய் உண்மையாவா?...... என்ன பண்ண சொல்லு...."

"ம்ஹ்ம் நீங்க முதல்ல ஏன் அப்படி நினைச்சிங்க அத சொல்லுங்க......"

" நீ அன்னைக்கு என்கிட்ட உங்கள வாழ்க்கை முழுக்க சகிச்சுக்க முடியாதுனு சொன்னப்ப எவ்வளவு வலிச்சது தெரியுமா?...... இருந்தாலும் உன் விருப்பத்துக்காக தான் கல்யாணத்த நிறுத்தறேன்னு சொன்னேன்.... சொல்லிட்டு வந்துட்டனே தவிர என்ன பண்ணறது? எப்படி நிறுத்தறதுனு ஒன்னுமே தெரியல......... அப்ப பார்த்து ரிஷி வந்தானா......... அவன்கிட்ட எனக்கு இந்த கல்யாணாத்துல இஷ்டம் இல்லனு சொன்னேன், காரணம் கேட்டப்போ எதுவும் சொல்லலை, ஒன்னுமே பேசாம போய்ட்டான். அன்னைக்கு நைட் என்ன கூப்பிடு, நீ உத்ராவ கல்யாணம் பண்ணிகலனா, நானும் விஜிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் இது தான் என் முடிவுனு சொல்லி போனை வைச்சுட்டான். எனக்கு என்ன செய்யறதுனே தெரியல, விஜி காக கல்யாணம் பண்ணிதான ஆகனும்னு நினைச்சேன். அதுமட்டுமில்ல எனக்கும் உன்ன விட்டு கொடுக்க மனசு வரல, அதுக்கு ஒரு காரணம் கிடைச்சதும் அப்படியே பிடிச்சுகிட்டேன்.ஆனாலும் உனக்கு பிடிக்காதத செய்றனேன்னு உறுத்திகிட்டே இருந்தது. அதுனால நீ ரொம்ப கஷ்ட படுறயோனு தோணிகிட்டே இருந்துதது. கார்ல வரப்ப அழுத இல்ல அப்போ தான் தெரிஞ்சுகிட்டேன் நீ அழுதா எனக்கு எவ்வளவு வலிக்கும்னு, அப்போ முடிவு பண்ணேன் உனக்கு பிடிச்ச மாதிரி உன்ன வாழவைக்கனும்னு, இப்போ கூட நான் பீச்ல தான் இருந்தேன். உன்கிட்ட பேசறதுக்கு என்ன தயார்படுத்திகிட்டு இருந்தேன். ஆனா இப்போ புரியுது இதெல்லாம் தேவையில்லாததுனு......"


"இப்பவாவது புரிஞ்சுதே...... அன்னைக்கு நான் உங்கள சகிச்சுக்க முடியாதுனா சொன்னேன் ...... நீங்க சொல்லுறத சகிச்சுக்க முடியாதுனு தான சொன்னேன்.. நீங்களா ஏதோ நினைச்சுகிட்டா நான் என்ன செய்யட்டும்........?, அன்னைக்கு நீங்க பேசிட்டு போனதும் நான் ரொம்பவே ஷாக் ஆகிட்டேன்....என்ன பிடிக்காம தான் கல்யாணாத்த நிறுத்தறீங்களோனு தோனுச்சு, ஆனா உங்க கண்ணுல தெரிஞ்ச வலி என்ன குழப்பிடுச்சு. விஜி தான் வந்து என்ன என்ன னு கேட்டு துளைச்சுட்டா அப்பறம் எல்லாம் சொன்னேன்.... அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா உண்மையாவே சரண் உன்ன லவ் பண்ணறான் டி ஏதோ கிறுக்குதனமா பண்ணிட்டான் னு, என்ன டி அண்ணன்னு சப்போர்ட் பண்ணறயானு கேட்டேன். இல்ல டி இத படிச்சா உனக்கே தெரியும்னு சொல்லி உங்க டைரிய கொடுத்துட்டு போய்ட்டா..., படிச்சப்ப தான் ஐயா, என்ன எவ்வளவு லவ் பண்ணிங்கனு தெரிஞ்சுது. அப்பறம் சாய்ந்தரம் ரிஷி போன் பண்ணான், சரண் கூட என்ன டி பிரச்சனைனு கேட்டான். ஏன் கேட்டதுக்கு நீங்க கல்யாணத்த நிறுத்த போறேன்னு சொன்னதா சொன்னான், நான் சும்மா சண்டைடா நான் சொல்லுற மாதிரி சொல்லுடா நான் சமாதான படுத்திகறேன்னு சொன்னேன், அவனும் அதே மாதிரி செஞ்சுட்டான். நானும் எல்லாம் சரியான மாதிரி அவன்கிட்ட காட்டிகிட்டேன். விஜிக்கு மட்டும் எல்லாம் தெரியும்.நாளைக்கு போன் பண்ணுவா பாருங்க......."


" எனக்கு தான் எதுவுமே தெரியாம முட்டாளா இருந்திருக்கேன்......."

"ம்ம்ம் புரிஞ்சுக்க மட்டுமில்ல , கண்ணு கூட தெரியாம இருந்திங்க.."

" என்னது........"

"பின்ன என்ன எத்தன தடவ உங்க காதலோட பார்த்திருப்பேன், ஒரு தடவயாவது என் கண்ண பார்தியா டா நீ"

" என்ன மரியாதயெல்லாம் தூள்பறக்குது......"

"ஆமா....... உனக்கு மரியாத வேற குடுக்கனுமா..... அதெல்லாம் முடியாது போடா...."

"என்ன டா வா உன்ன........" என்று அவளை தூக்கிகொண்டு தங்களது அறைக்கு சென்றான்.


நீ என் வானம்,நீ என் காற்று,நீ என் மூச்சு
இப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன் - ஏனெனில்
நான் என்பதே நீயல்லவா.


(இனி நாம டிஸ்டர்ப் பண்ணா அடிக்க வந்திடுவாங்க..... வாங்க ஒடிடுவோம்....)

- சுபம் -

நான் என்பதே நீயல்லவா - 24

இரகசியத்தை சொல்ல படபடக்கும் இதயத்தோடு எத்தனையோ கனவுகளையும் சுமந்தபடி உத்ரா சரணிருக்கும் அறைக்குள் கால் எடுத்து வைத்தாள். அங்கு அவன் அவளிடம் ஒருவார்த்தைகூட பேசவில்லை பேசுவது என்ன அவளை பார்க்க கூட இல்லை அமைதியாக அமர்ந்திருந்தான். சிறிது நேரம் நின்றிருந்தவள் தானாகவே பேச்சை ஆரம்பித்தாள்

"சரண்........"

"உத்ரா இப்போ எதும் என்ன கேட்காத , என்னால பதில் சொல்ல முடியாது.........."

"இல்ல சரண்....... அது......."

"ப்ளிஸ்........." அவனை இரண்டு நிமிடம் உற்றுநோக்கியவள் அமைதியாய் கீழே படுத்துக்கொண்டாள்.


அடுத்த நாள் காலையிலையே இருவரும் சென்னை கிளம்பினர். சரஸ்வதி,கீர்த்தி,விஜி முவரும் அழுதபடியே வழியனுப்ப இருவருமாய் காரில் புறப்பட்டனர். பெற்றவர்கள் அனைவரும் அன்றிரவே திருப்பதி செல்வதால் ராஜாத்தியும், பெருமாளும் இவர்களுடன் வரவில்லை. இவர்கள் மட்டும் தனியாக பயணித்தனர். புறப்படும் போது வராத அழுகை, அவர்கள் தலை மறைந்தவுடன் வந்தது உத்ராவிற்கு. சரண் தான் காரை ஓட்டிகொண்டு வந்தான்.

உத்ரா கண்கலங்கியபடி வர , அதை பார்த்தும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் சிறிது தூரம் வந்த சரண், காரை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு அவளை பார்த்தான். உத்ரா இவனை பார்க்கவில்லை அழுகையை கட்டுபடுத்த முயன்று கொண்டிருந்தாள், என்ன நினைத்தானோ அவளை தன் தோளில் சாய்த்துகொண்டான். அதற்கு மேல் தாங்காது என்பது போல அழுகை வெடிக்க அவனது சட்டையை ஈரமாக்கினாள். அவள் அழுவதை பொறுக்காதவன்

" உத்தி குட்டி எதுக்கு இப்படி அழற....... வேண்னும்னா திரும்பி போலாமா? ......... அழாதீங்க டா." என்று குழந்தைக்கு சொல்வதுபோல் தலையை தடவி சமாதான படுத்தினான். அவனது அருகாமையோ அல்லது சமாதான பேச்சோ அவளது அழுகை மெல்ல குறைந்தது.அதற்கு மேல் தன்னை கட்டுபடுத்த இயலதாவன் அவளை விலக்கிவிட்டு, காரை எடுத்தான். அவனது செய்கையில் வேறுபாட்டை உணர்ந்தவள், 'என்னாயிற்று திடீரென்று?' என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள். அவர்கள் சென்னைக்கு வரும் போது மதியவேளையாகியிருந்தது, உத்ராவின் கண்களில் பசியை பார்த்தவன் நல்ல உணவகத்திற்கு வண்டியை விட்டான். தன் மனதறிந்து நடந்தவனை காண உள்ளம் நிறைந்தது உத்ராவிற்கு. இருவருக்கும் தேவையானதை ஆர்டர் செய்து வரவழைத்தவன் , அவள் நன்றாக உண்ணும்படி பார்த்துகொண்டான்.

சாப்பிட்டு முடித்ததும் உத்ராவை வீட்டில் கொண்டுபோய்விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டான். முதலில் பணகளைப்பு தீர குளித்துமுடித்தவள், பின் அவனது அறையில் தனது பொருட்களை அடுக்கி வைத்தாள். வீட்டை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தியவள், இரவுக்கு என்ன செய்யலாம்? என்ன இருக்கிறது? என்று பார்த்துவிட்டு சாப்பாத்தி செய்து குருமா வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அதன்படி சப்பாத்தி செய்து மணக்க மணக்க குருமாவும் வைத்தாள். அவள் நினைவெல்லாம் சரண் எப்படி இதை ரசித்து சாப்பிடுவான் என்ற கற்பனையில் தான் இருந்தது. அவன் இவள் தலையில் இடியை இறக்க போவது தெரியாமல்.


இருட்டிய பின் வீடுவந்தவன் அவளிடம் பேசாமல் ஒருவித இறுக்கத்துடன் இருந்தான். குளித்துவிட்டு வந்தவனுக்கு சூடாய் தான் செய்ததை ஆசையுடன் பரிமாறியவள், ஆவலாய் அவன் முகம் பார்த்தபடி அமர்ந்தாள். இவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்துவிட்டு அவளையும் சாப்பிடுமாறு கூறி அவன் பரிமாறினான். இருவருமாய் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர். அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு சுத்தபடுத்திவிட்டு வந்தாள் உத்ரா. அவளுக்காக காத்திருந்தான் சரண்.உத்ராவிற்கும் புரிந்தது அவன் தனக்காக தான் காத்திருக்கிறான் என்று. அமைதியாய் அவன் முன் நின்றாள். சிறிது நேர அமைதிக்கு பின்

" உத்ரா மன்னிச்சுகோ என்னால இந்த கல்யாணத்த நிறுத்த முடியல....... உனக்கு .... இந்த கல்யாணத்துல சம்மதமில்லனு எனக்கு தெரியும் ........" ஏதோ கோபத்தோடு சொல்லவந்தவளை கைகாட்டி நிறுத்தியவன்

" இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துகோ ...... அதுகப்பறம் நான் சொன்ன மாதிரியே ..... உன் கண்ணுல கண்டிப்பா படமாட்டேன்........ உன் இஷ்டபடி உன் வாழ்கைய அமைச்சுகோ........" என்று விட்டு அவள் முகம் பார்த்தான்.

நான் என்பதே நீயல்லவா - 23

அதிகாலை நேரம் அந்த மண்டபத்தில் மெல்லிய மங்கல இசை ஒலிக்க , அதை கேட்டு ரசித்தபடி, சந்தோஷத்தோடு இனிய பரபரப்பும் தொற்றிகொள்ள'அதை செய் இதை செய்' பெரியவர்களும் சிறியவர்களும் வேலை வாங்கியபடியும் , செய்தபடியும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர். தாங்கள் மணமகன்கள் என்பதை மறந்து ரிஷி,விக்கி,சரண் முவரும் ஆளுக்கு ஒரு வேலை செய்தபடி வந்தவர்களையும் கவனித்துகொண்டிருந்தனர். மணமகள்களான உத்ரா,விஜி,கீர்த்தி முவரும் புதுபெண் நாணத்துடன் மணமேடையில் தங்களின் இணையை சந்திக்க போகும் ஆர்வத்தில் தங்களை நேர்த்தியாய் அலங்கரித்து கொண்டிருந்தனர். சரஸ்வதி - மல்லிகார்ஜுன், பிரபாவதி - கண்ணன், குருமூர்த்தி - லட்சுமியம்மாள், ராஜாத்தி - பெருமாள் அனைவரும் தங்கள் பிள்ளைகளின் வாழ்வு இனி இன்பமையமாக போவதை நினைத்து மகிழ்ந்தபடி ஐயர் சொன்ன வேலைகளை செய்துகொண்டும், வருபவர்களை வரவேற்று உபசரித்தபடியும் இருந்தனர்.


மணமகன்களை மேடைக்கு அழைக்க முவரும் சென்று அமர்ந்தனர். மணமகளும் அழைக்கப்பட அனைவரின் கவனமும் மணமகள் அறை வாசலிலேயே இருந்தது. தேவதைகளுக்கு நிகராய் கண்களில் கனவுகளோடு முவரும் மெல்லநடையிட்டு வர, அவர்களது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியோடு அவர்களை பார்த்துகொண்டிருந்தனர் இவர்கள்.தங்களின் ஜோடிகளுக்கு அருகில் அமர்ந்தனர். ஐயர் சொல்லி கொடுத்தப்படி " நான் இவளை என் இணையாக ஏற்கிறேன், எந்த ஒரு துன்பதிலும் இவளுக்கு உறுதுணையாக இருப்பேன், இனி நானும் இவளும் வேறல்ல என்று அக்னி தேவனின் சாட்சியாகவும், இங்குள்ள பெரியோரின் சாட்சியாகவும் உறுதி கூறுகிறேன் " என்று மணமகன்களும் , மணமகள்களும் உறுதிகூறினர். மங்கள வாத்தியங்கள் முழங்க விஜி நாத்தனார் முடிச்சிட முதலில் சரண் உத்ராவின் கழுத்தில் தாலிகட்டி அவளை தனது மனைவியாக்கிகொண்டான். பின் உத்ராவும் , கீர்த்தியும் சேர்ந்து நாத்தனார் முடிச்சிட விஜியின் கழுத்தில் ரிஷி தாலிகட்டினான். கடைசியாய் கீர்த்திக்கும் விஜியே நாத்தனார் முடிச்சிட தாலிகட்டி அவளை தன் இணையாக்கி கொண்டான் விக்கி. பெற்றவர்களின் மனதும் கண்களும் நிறைய ஆசிகூறினர்.

சின்ன சீண்டல்கள், செல்ல கொஞ்சல்கள், யாரும் அறியாத சில்மிஷ்ங்கள் என்று விக்கி - கீர்த்தி, விஜி - ரிஷி இரண்டு ஜோடிகளும் தங்களுக்கான தனி உலகத்தில் சஞ்சரிக்க, உத்ரா - சரண் மட்டும் அமைதியாய் இருந்தனர். அவர்களை போல் விளையாட இவர்களுக்கும் உள்ளுர ஆசை தான் என்ன செய்ய முடியவில்லை. அன்று மாலையே கீர்த்தியும், விஜியும் தம் புகுந்த வீட்டிற்கு சென்றனர். சரணும், உத்ராவும் அன்றிரவு உத்ராவின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் சென்னை செல்வதாய் முடிவானது. மூன்று ஜோடிகளுக்கும் அன்றே முதலிரவு என்று முடிவு செய்யப்பட்டது.பெரியவர்கள் அனைவரும் மூவரையும் தயார்படுத்தி அனுப்பி வைத்தனர்.


புதிதாய் தோன்றிய நாணத்தோடு கையில் பால் சொம்பை வைத்துகொண்டு நடக்க தெரியாதவள் நடப்பது போல விக்கியினது அறைக்குள் நுழைந்தாள் கீர்த்தி. அவளை அனுஅனுவாய் அவன் ரசிக்க இவளுக்கு வெட்கம் தின்றது.அப்படியே நின்றிருந்தவளை தன்னருகில் அமர்த்திகொண்டவன்

"கீர்த்தி இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?........., ஆனா ஒரு வருத்தம் ........."

"என்னங்க....அது?"

"நீ என்ன பெயர் சொல்லி , வா டா போடா கூப்பிடு டி........இந்த எங்க , என்னங்க எல்லாம் வேண்டாம்"

"இவ்வளவு தானா?..... சரி டா" செல்லமாக முறைத்துவிட்டு

"என் வருத்தம் அதில்ல நான் தான் இது வரைக்கும் உன் கிட்ட I LOVE U சொல்லிருக்கேன், நீ ஒரு தடவ கூட சொல்லலையே......."

"அது........ சொன்னா தான் உனக்கு தெரியுமா...... சரி உனக்காக சொல்லுறேன் ....." என்று அவனது கைகளை பிடித்து தன் கைக்குள் வைத்தவள் " I LOVE U விக்கி" என்று அவனது கையில் மென்மையாக முத்தமிட்டாள் அவன் அவளை அணைத்துகொண்டான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரிஷியின் அறையில் நுழைந்த விஜிக்கு அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை, காலையிலிருந்து எதையாவது செய்து அவளை வெட்கபட வைத்துகொண்டிருந்தான்.விஜியை மனதினை படித்தவன் அவளிடம் சிறிது விளையாட நினைத்து போனை எடுத்தவன் தன் அன்னைக்கு கால் செய்து

"Darling ......... darling.... எங்க இருக்க?" என விஜி அவனை முறைத்துகொண்டிருந்தாள்.

"ஏன் டா படுத்தற ........ விஜி பார்த்திகிட்டு இருக்காளா.... அவள ஒட்டுறதுக்கு தான் எனக்கு கூப்பிடயா...?"

"அதெப்படி டார்லிங் இவ்வளவு கரக்டா சொல்லுற........"

"உனக்கு அம்மாவாச்சே.......... குடு அவகிட்ட......"

"எதுக்கு டார்லிங்.?"

"குடு டா நா"

"இந்தா விஜி என் டார்லிங் உன் கிட்ட பேசனுமாம்........." கையில் வாங்கியவள் அதை காதிற்கு கொடுத்து

"சொல்லுங்க அத்தை..." என ரிஷியின் முகத்தில் ஈயாடவில்லை, அதை பார்த்து சிரித்தாள் விஜி, லட்சுமியம்மாள்

"என்னமா ஷாக் ஆகிடானா?"

"ஆமா அத்த பேயறஞ்சமாதிரி உட்காந்திருக்காரு....." சிரித்தவர்

"சரி டா..... வைச்சுட வா......" போனை கட் செய்துவிட்டு தன் பிள்ளையை நினைத்தபடி தூங்க சென்றார். போனை வைத்துவிட்டு அவனை பார்த்தவளுக்கு சிரிப்பை கட்டுபடுத்தமுடியவில்லை. அவளை இழுத்து தன்னோடு ஒட்டி அமரவைத்தவன்

"ஏ......... உனக்கு தெரியுமா?"

"ம்..... அத்த தான் சொன்னாங்க......"

"வேற என்ன சொன்னாங்க?....."

"ம்..........என் பையன் ஒரு வாலு அவன நீ தான் அடக்கனும்னு........ அதுனால இனி குறும்பு பண்ணா அடிதான்.......புரிஞ்சுதா?" என்று மிரட்ட

"எங்க அடி பார்போம்.........." என்று தன் குறும்புகளை முழுவதுமாக காண்பிக்க தொடங்கினான்.

நான் என்பதே நீயல்லவா - 22

காலைவேளை வழக்கம் போல் காபியை உறிஞ்சியபடி யோசித்துகொண்டிருந்தாள் உத்ரா. இன்றோடு நிச்சயம் முடிந்து நான்குநாட்கள் ஆகிவிட்டன. இந்த நான்கு நாட்களும் தினமும் அவளின் தாயும் தந்தையும் வந்து 'ஏன் இப்படி இருக்கிறாய்?' என்று கேட்காத நேரமில்லை, உத்ராவும் ஒன்றுமில்லையென்று சொல்லியே ஓய்ந்துபோனாள். மல்லிகார்ஜுனுக்கு மகளுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லையோ என்ற எண்ணம் தோன்றாததுக்கு காரணாமும் உத்ரா தான். சரணை பற்றிய பேச்சு வரும் போது ஒன்று அறைக்குள் சென்றுவிடுவாள் இல்லையென்றால் முகம்தெரியாதபடி குனிந்து கொள்வாள், இதை அவர்கள் வெட்கம் என்று எடுத்துகொண்டனர். உத்ராவிற்கு கூட சிலசமயம் தோன்றும் உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்திவிடலாமா என்று, அப்போது பார்த்து கல்யாண விஷயமாக ஏதாவது பேச்சுவரும் அதில் அவர்கள் அடையும் சந்தோஷத்தை பார்த்து வாயை மூடிகொள்வாள். அதை தவிரவும் ஏதோ ஒன்று தடுத்தது.


கீர்த்திக்கும், விஜிக்கும் மட்டும் இவளது செயல்பாடுகளில் வேறுபாடு தெரிந்தது. நிச்சயத்திற்கு ஷாப்பிங் சென்ற போது ஆர்வமாய் அனைத்தையும் ஆராய்ந்தவள், கல்யாணத்திற்கு என்று வரும் போது ஆர்வமில்லாமல் எதையாவது எடுங்கள் என்று சொல்லவது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்களும் அவளை குடைய ஆரம்பித்திருந்தனர். ஏற்கனவே தாய், தந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிகொண்டிருந்தாள் , இதில் இவர்களும் சேர்ந்துகொள்ள எப்போதும் தனிமையில் இருப்பதே வாடிக்கையானது.

இதற்கிடையில் எத்தனையோ முறை சரண் உத்ராவிடம் பேச முயன்றான், அதற்கு இவள் தான் தயாராக இல்லை, போனில் கூப்பிட்டுகொண்டே இருக்கிறான் என்று போனை ஸ்விட்ச் ஆப் செய்து மூலையில் போட்டுவிட்டாள், நேரில் வந்தான் என்றால் அறையை விட்டு வெளியில் வரமாட்டாள், இப்படியே அவனிடம் கண்ணமுச்சி ஆடி கொண்டிருந்தாள். சரணது நிலை தான் பாவமாக இருந்தது எத்தனை ஆசைகளோடு இருந்தான் நடுவில் என்னெனவோ நடந்துவிட்டது. அதில் முழுக்க இவனது தவறு தான் என்றாலும் அதை சரி படுத்த ஒருவாய்ப்பு கேட்கலாம் என்றால் அவளை பார்க்க கூட முடியவில்லையே.., தினமும் அவளது பார்வைக்காய் ஏங்கி தவித்தான்.


இவர்களின் கண்ணாமூச்சியை கவனமாய் பார்த்துகொண்டிருந்த விஜிக்கு ஓரளவு என்ன நடக்கிறது என்று புரிய, அன்றிரவு சரணை கேள்விகளால் துளைத்தெடுத்தாள் அவனும் நடந்தது அனைத்தையும் சொல்லிமுடித்தான். விஜிக்கு அவனை அடித்தால் கூட தேவலாம் என்றிருந்தது, தான் அத்தனை சொல்லியும் அவளை தவறாக நினைத்திருக்கிறான், அப்படி நினைப்பவன் எதற்காக கல்யாணம் செய்துகொள்வதாய் சொல்லவேண்டும்? இந்த நிலை எனக்கு வந்திருந்தால் சும்மா விட்டுருப்பானா? என்று மனதில் ஒடிய எதையும் மறைக்காமல் அப்படியே கேட்டுவிட்டாள்.அவனால் பதிலெதும் சொல்ல முடியவில்லை. தான் செய்தது தவறென்பதை ஒத்துகொண்டவன், தனக்கு உதவுமாறு கேட்டுகொண்டான். கோபம் இருப்பினும் தன்னை கட்டுபடுத்திகொண்டவள், என்ன செய்ய வேண்டுமென்பதை கேட்டுகொண்டு நகர்ந்தாள்.

சரண் சொன்னதுபோலவே உத்ராவை வற்புறுத்தி Restaurant கு அழைத்துவந்தவள், தூரத்தில் அவன் வருவது தெரிந்தவுடன்

"இப்போ வந்திடறேன் டி" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள்சென்ற சிறிது நேரத்தில் இவன் வந்து அமரவும் அவளுக்கு புரிந்துவிட்டது இது இவனது வேலைதான் என்று, கோபத்தோடு எழுந்து கிளம்பபோனவளை கையை பிடித்து தடுத்தவன்

" ப்ளிஸ் உத்ரா ஒரு பத்துநிமிஷம் நான் என்ன சொல்லறேன்னு கேட்டுட்டு போ ...... ப்ளிஸ்" கெஞ்சலாகவும் அதே சமயம் உரிமையுடனும் கேட்டான்.அமைதியாக அமர்ந்தாள்.

"நான் பேசியது தப்பு தான், இல்லைனு சொல்லல அத திருத்திக்க ஒரு வாய்ப்புகொடுனு தான் கேட்கறேன்"

"........."

"நான் உன்ன லவ் பண்ணறேன்.......... இத இந்த மாதிரி சூழ்நிலைல சொல்ல வேண்டி வரும்னு நான் நினைக்கல.... சாரி மா....... ரியலி சாரி...." அவளை முதன்முதலாக பார்த்த தருணத்திலிருந்து நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தான்.

" இதுனால மட்டும் நான் செஞ்சது சரினு ஆகிடாது....... எனக்கு தெரியும் என்னை நீ ரொம்ப லவ் பண்ணறனு அதுனால தான் நான் சொன்னத உன்னால ஜீரணிக்க முடியல......... மன்னிச்சுகோ...... உன் மேல அதிகமான காதல் தான் என்ன அப்படி பேசவைச்சுடுச்சு.... மன்னிச்சுகோ டி........ என் கூட பேசவே மாட்டியா?.........." அவன் கண்களில் இருந்த ஏக்கமும், குரலில் இருந்த வருத்தமும் என்னவோ செய்ய வாய் திறந்தாள்

" அதுகாக என்னவேனும்னாலும் பேசுவீங்களா........... யார்கூடவேனும்னாலும் சேர்த்துவைச்சு பேசுவீங்க...... வாழ்க்கமுழுக்க அதை சகிச்சுகிட்டு என்னால இருக்க முடியாது.........." அவள் சொன்னது எச்சரிக்க தான், இவனோ

" சரி......... உனக்கு நம்பிக்கை இல்லனா வேண்டாம்..... நான் இந்த கல்யாணத்த எப்படியாவது நிறுத்திடறேன்........ இனி உன் கண்ணுல கூட நான் படமாட்டேன்..." சொல்லி முடிக்கும் போதே தொண்டையை அடைத்தது, அவள் முகம் பாராமல் வந்துவிட்டான். இவள் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

Friday, January 27, 2012

நான் என்பதே நீயல்லவா - 21

மாடிக்கு சென்ற விஜியும் ரிஷியும் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.ரிஷி தான் முதலில் பேசினான்.
விஜியை கண்களில் காதலுடன் பார்த்து, தள்ளி நின்றிருந்தவளின் அருகில் சென்று

" விஜி I LOVE U , இத சொல்ல எத்தனை கஷ்டபட்டுடேன் தெரியுமா?" என்று சோகமாய் சொல்ல அதற்கு அவளிடமிருந்து பதில் வராமல் போகவே முகத்தை நிமிர்தினான். அவளது கண்களில் இருந்து நீர் வழிந்து கன்னத்தை ஈரமாக்கி இருந்தது. அதை பார்த்து பதறியவன்

" என்னமா எதுக்கு இப்ப கண்கலங்கற?" என்று கண்ணீரை துடைத்துவிட்டான் , அவனது கையை பிடித்தவள்

"இதை கேட்டுவிட எத்தனை துடித்தேன் தெரியுமா?" என ரயில் நிலையத்தில் நடந்தது ஞாபகம் வர அவன் சிரித்துகொண்டே

"தெரியுமே......." அவனது சிரிப்பை கண்ணிமைக்காமல் ரசித்தாள், அவள் முன் கையாட்டி நினைவிற்கு கொண்டுவந்தவன்

" ஹல்லோ ...... சொன்னதுக்கு பதில் சொல்லாம dreamக்கு போய்டீங்களா?"

"என்ன சொன்னீங்க?..."

"I LOVE U"

"என்ன சொல்லனும்.?.."

"உனக்கு என்ன தோனுதோ அது சொல்லு"

"I LOVE U TOO" சொல்லிவிட்டு திரும்பிகொண்டாள் அவன் அவளை திருப்பி முகம் பார்க்க கன்னங்கள் சிவப்பை தாங்கி இருந்தது. இருவரும் மனம் விட்டு சிரித்தனர்.சிறிது நேரத்திற்கு பின்

" நடந்ததெல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு...." விஜி சொல்ல

"நான் இதெல்லாம் நடக்குமானு தெரியாம இருந்தேன்........ உத்ரா நடத்தி கொடுத்துட்டா......., நம்ம கல்யாணம் நடக்கபோகுதுனா அதுக்கு காரணம் உத்ராவும், அவங்க அப்பாவும் தான்"

"என்ன மாமாக்கு தெரியுமா?"

"தெரியுமாவா அப்பாதான் எல்லோர்கிட்டயும் பேசினதே....."

"எனக்கு ஒன்னுமே புரியல...... என்ன நடந்ததுனு கொஞ்சம் விளக்கமாதான் சொல்லூங்களேன்..."

"சொல்லலாம் ஆனா அதுக்கு கொஞ்சம் FEES கொடுக்கனுமே..."

"fees அ ....?"

"ஆமா" என்று கன்னத்தை காட்ட அவள் புரிந்து மறுக்க, இவன் அடம்பிடிக்க எப்படியோ ஒரு முத்தம் வாங்கியும் விட்டான்.

" அப்பா...... இப்ப சொல்லலாம்..." என்று கண்ணடிக்க அவள் செல்லமாய் ஒரு குத்து வைத்தாள், அப்படியே இருவரும் அமர்ந்தனர்.ரிஷி நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

அன்று விஜியிடம் ரயிலில் பேசிவிட்டு வந்தபிறகு உத்ராவிற்கு ஒரு யோசனை தோன்றியது, அதனை செயல் படுத்த தந்தையின் உதவியும் வேண்டுமாதலால் இதை பற்றி தந்தையிடம் பேசிவிட்டு பின் ரிஷியிடம் பேசலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.அதன்பின் மாலை தந்தையின் தன் சம்மதத்தை தெரிவித்துவிட்டு தனது யோசனையையும் சொன்னாள்.மல்லிகார்ஜுன் விஜியை தன் மகள் போலவே நினைப்பதால் உத்ராவிற்கு விஜியின் எதிர்காலத்தில் இருந்த அதே அக்கறை அவருக்கும் இருந்தது. அவள் சொன்ன யோசனை நல்லதாய் தோன்றவே அதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக சொல்லிவிட்டார். அடுத்த நாள் காலையே ரிஷியிடம் தன் யோசனைகளை சொன்னவள் அதன்படி அவனது தந்தையையும், தாயையும் தங்களின் வீட்டிற்கு வரசொன்னாள். ரிஷியும் அவர்களிடம் பேசிவிட குருமுர்த்தியும், லட்சுமியம்மாளும் மறுநாளே நல்ல நாள் என்பதால் அன்றே உத்ராவின் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

சரஸ்வதி வந்தவர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு மல்லிகார்ஜுனுக்கு போன் செய்து வரவைத்தார்( அவரிடமும் எல்லாம் சொல்லீருந்தனர்).வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ரிஷியின் தந்தையாய் வந்திருப்பது தன் கல்லூரிதோழன் என்று தெரிந்ததும் இருவரையும் கையில் பிடிக்கமுடியவில்லை.அன்று முழுவதும் தங்களின் பழைய கதைகளை ஆசைதீர பேசிமகிழ்ந்தனர். மாலை வீடு வந்த கீர்த்திக்கு அவரை அறிமுக படுத்திவைக்க அவளுக்கு நன்றாகவே தெரிந்தது அவர் யாரேன்று. எப்போதும் தன் கல்லூரிகலாட்டாக்களை தன் மகள்களிடம் சொல்லுவார் மல்லிகார்ஜுன். அதனால் சீக்கரமே அடையாளம் தெரிந்துகொள்ள முடிந்தது அவளுக்கு.உத்ராவும் ஆபிஸில் சொல்லிவிட்டு சீக்கரமே வந்துவிட அவர்களின் வீடு கலகலவென்றிருந்தது. புதிதாய் பார்ப்பவர்கள் என்ற தயக்கம் மறைந்து அவர்களை அத்தை, மாமா வென்று அழைத்தனர் கீர்த்தியும், உத்ராவும்.ஆனால் குருமூர்த்தியோ அப்பா, அம்மாவென்று உரிமையோடு அழைக்கும்படியும், ரிஷி இவர்களுக்கு அண்ணன் என்றும், நாங்கள் உங்களுக்கு தந்தை, தாயென்றும் சொல்லி நெகிழவைத்தனர். மல்லிகார்ஜுனும்- சரஸ்வதியும் ரிஷியும் தங்களின் மகன் தான் என்று உரிமைகொண்டாட அங்கு ஒரு இனிய பந்தம் உருவானது.

விஜியின் வீட்டிற்கு அனைவருமாய் சென்றனர், கீர்த்தியை தவிர அவளுக்கும் இது surprise ஆகவே இருக்கட்டுமென்று அவர்கள் அவளிடம் எதையும் சொல்லவில்லை.கண்ணனிடமும் பிரபாவதியிடமும் விஜி-ரிஷியின் காதலை பற்றி சொல்லி அவர்களின் சம்மததை வாங்கிகொண்டனர்.பெருமாளும்- ராஜாத்தியம்மாளும் அங்கேயே இருந்ததால் அவர்களுக்கும் இந்த விஷயம் தெரியும், அவர்களுக்கும் இதில் மகிழ்ச்சி தான்.விஜி அலுவலகத்திலிருந்து வருவதற்கு முன் அனைவரும் அவரவர் வீடு திரும்பிவிட்டனர்.சரண் சென்னையிலிருந்ததால் அவனுக்கு தெரியவில்லை, தெரிவிக்கவும் வேண்டாமென்று உத்ரா தான் கேட்டுகொண்டாள், தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகொள்வது தெரியாமல்.நிச்சயவேலைகள் அனைத்தும் வேகமாய் நடந்தது. இதற்கிடையில் பெங்களுரிலிருந்து திரும்பிய ரிஷி விஜிவிட்டிற்கு வந்து தன்னை அறிமுகபடுத்திகொண்டு, விஜியை நன்றாக பார்த்துகொள்வதாக உறுதிகூறி சென்றான். அதன்பின் எத்தனையோ முறை உத்ராவின் வீட்டிற்கு வந்து விஜியை அவளறியாமல் பார்த்துவிட்டு சென்றிருக்கிறான். இப்படிதான் அவர்கள் நிச்சயம் நடந்தது.

ரிஷி சொல்லிமுடித்துவிட்டு விஜியின் முகம் பார்த்தான், அவளோ 'தன்னை சுற்றி தன்மீது அக்கறையில்லாதவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் நினைத்திருந்தேன், ஆனால் தனக்காக எத்தனைபேர் எவ்வளவு அக்கறையோடு செயல்பட்டுள்ளானர்' என்று எண்ணி கண்ணீர் சிந்தினாள். சிறிது நேரம் பார்த்துகொண்டிருந்தவன் அவளை தன் தோளோடு சேர்த்தணைத்துகொண்டான். சிறிது நேரம் அப்படியே இருந்தவள், தனக்கு உத்ராவை இப்போதே பார்க்கவேண்டுமென்று சொல்ல இருவருமாய் உத்ராவின் அறைக்கு சென்றனர். கதவை பலமுறை தட்டியும் திறக்காமல் போகவே குரல் கொடுத்தாள் விஜி. விஜியின் குரல் கேட்கவும் தான் தன்னை சீர்படுத்திகொண்டு கதவை திறந்தாள் உத்ரா.

உத்ராவை பார்த்தவுடன் கட்டிகொண்ட விஜி அப்படியே அழுதாள்.

"சாரி டி...." அவளை நிமிர்த்தியவள் கண்களை மெதுவாக துடைத்துவிட்டு

"லூசு எதுக்கு இப்ப சாரி ...... ம்...... சும்மா இதுகெல்லாமா அழுவாங்க .. வர வர அழுமூஞ்சியாகிட்ட விஜி நீ..." சூழ்நிலையை மாற்றுவதற்காக ரிஷி

"அழுமூஞ்சி விஜி பேரு நல்லாயிருக்கே...... இனிமே நான் இப்படிதான் கூப்பிட போறேன்..."

" ரிஷி என் ஃப்ரண்ட அப்படியெல்லாம் நீ கூப்பிட கூடாது ...................... நான் மட்டும் தான் கூப்பிடுவேன்"

" நான் ஒன்னும் உன் ஃப்ரண்ட கூப்பிடலையே என் பொண்டாடிய தான் கூப்பிடறேன்...... "

"ரெண்டுபேரும் எனக்கு புது பேரா வைக்கறீங்க உங்கள......." என்ற சில அடிகளை இருவருக்கும் பகிர்ந்தளித்தாள்.இவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டு அங்கு வந்தனர் கீர்த்தியும், விக்கியும். விக்கி

"என்ன இங்க பிரச்சன? என்ன இங்க பிரச்சன?" என

" வந்துட்டாரு நாட்டாமை பிரச்சனைய சொன்னவுடனே தீர்த்துடுவாரு" என்று உத்ரா கிண்டலடிக்க

" ஏன் விக்கி தீர்க்க மாட்டாறா?" என்று கீர்த்தி சண்டைக்கு வர அனைவரும் 'ஒ' வென்று ஆர்பரிக்க கீர்த்தி நாணி தலைகுனிந்தாள். அதற்கும் அங்கு ஒரு பெரிய சத்தம் பிறந்து மண்டபத்தை அதிரவைத்தது. சந்தோஷ அலை அனைவரது மனதிலும் அடிக்க, ஒருவன் மட்டும் தன்னிடமும் அவள் இப்படி பேசி சிரிப்பாளா? என்று ஏங்கிகொண்டிருந்தான்.

நான் என்பதே நீயல்லவா - 20

சரண் உத்ராவின் அறைக்கதவை தட்டினான், திறந்தவள் அவனைப்பார்த்ததும் மறுபடியும் மூடிகொள்ள முற்பட கைவைத்து தடுத்தவன்

" உத்தி ப்ளிஸ் நான் சொல்லுறத கொஞ்சம் கேளேன்........" என்று அவன் கெஞ்சிகொண்டிருக்க தன் பலம் முழுவதுமாய் உபயோகித்து கதவை சாத்தியவள், அப்படியே சரிந்து அமர்ந்து அழலானாள்.


இங்கிருந்து கதவை தட்டிகொண்டிருந்தால் பார்ப்பவர்கள் தவறாக நினைக்கலாம் என்று நினைத்தவன் தன்னறைக்கு சென்று உத்ராவை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் அவள் அதை ஏற்கவில்லை.பல முறை முயற்சி செய்தவன் சோர்ந்துபோய் கட்டிலில் அமர்ந்தான்.அவன் அழைக்காமலே அன்றய நினைவுகள் கண்முன் விரிந்தன.

அன்று பிராபாவதி விஜியிடம் பேசுமாறு அனுப்பிவைக்க சென்றவன் கண்டது, போனில் பேசிகொண்டிருந்தவள் உத்ரா பெயர்கேட்கவும் கண்களில் நீர்கோர்க்க பேசியவளை தான். சரண் அருகில் சென்று என்னவென்று விசாரிக்க, அப்போது அவளுக்கும் அனைத்தையும் சொல்ல ஒருவர் வேண்டுமென்ற நிலையில் அனைத்தையும் சொல்லிமுடித்தாள். சொல்லும்போது அவளுக்கு தெரியவில்லை இருவரின் சந்தோஷத்தை குலைக்கபோகிறோம் என்று. அவள் செய்த தவறு தன் யூகத்தை உண்மையென்று சொன்னது தான். முதலில் அவ்வாறு இருக்காது என்று நினைத்தவன் பின் முழுவதும் உண்மையென்றே நம்பினான்.அவனுக்கு கோபம் வந்தது ரிஷியை எப்படி காதலிக்கலாம் என்று. விஜிக்கு எதோ வாயில் வந்த சமாதனத்தை சொல்லிவிட்டு வந்துவிட்டான்.என்ன செய்தும் அவனது கோபம் மட்டுபடவில்லை.


மாலையில் விக்கியோடு உத்ரா வந்து நிற்கவும் கோபம் அதிகமாக அதை அப்படியே அவளிடம் காட்டியும் விட்டான். உண்மையில் உத்ராவோடு வந்தது ரிஷி என்று தான் நினைத்திருந்தான் , அவள் அறிமுகப்படுத்தும் போது தான் உண்மை புரிந்தது.ஏற்கனவே தன்னை உத்ரா மிகவும் பாதிக்கிறாள் என்று அவன் உணர்ந்தே தான் இருந்தான், ஆனால் தன்னால் அவளை ஒரு கணமும் வெறுக்கமுடியாது என்று பின் வந்த நாட்களில் நன்றாகவே புரிந்து கொண்டான். அதனால் தான் கண்ணன் சொன்னதும் எதற்கும் கேட்கடுமே என்று அவரிடம் தன் மனதினை சொல்லி வைத்தான். அவள் சம்மதம் சொன்னது அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் என்று யோசிக்க ஆரம்பித்தான் அவனது விதி எல்லாவற்றையும் தவறாகவே யோசித்தான்.விஜி உத்ராவிடம் பேசிவிட்டு முதலில் போன் செய்தது சரணுக்கு தான், உத்ரா ரிஷியை காதலிக்கவில்லை ரிஷி தான் உத்ராவை காதலித்திருக்கவேண்டும் என்று சொன்னாள், விஜியிடம் சரியென்று விட்டு தன் சந்தேகங்களை மனதில் புதைத்தான்.அது தான் அன்று உத்ராவின் மனதினை உடைத்திட பூகம்பமாய் வந்துவிட்டது.

அன்று அவன் நண்பர்களின் வற்புறுத்தலால் மது அருந்தியவனின் கண்ணில் சிரித்துகொண்டிருந்த உத்ராவும், ஏக்கத்தோடு இருந்த விஜியும் பட்டுதொலைத்தனர். முதலில் தன் மனதை கட்டு படுத்தி அவளை அழைத்தவன், அவள் மாடிக்கு வந்ததும் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா?, உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? என்று தான் கேட்டான். சிந்தையில் இருந்த உத்ராவின் காதுகளில் அவனது கேள்வி விழுகாமல் போக வந்தது பிரச்சனை. அதுவே அவனுக்கு கோபத்தை அதிகபடுத்த வாய்க்குவந்தபடி பேசிவிட்டான். இப்போது அதற்காய் கவலைபடுகிறான். ஒரு பெருமூச்சோடு எழுந்தவன் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்தான்

நான் என்பதே நீயல்லவா - 19

காலை உத்ரா கண்விழிக்கும் போது மணி ஏழரை ஆகியிருந்தது.மெதுவாக எழுந்து அமர்ந்தாள். அவளருகில் வந்த சரஸ்வதி கடிந்து கொண்டார்.

"இன்னைக்கு போய் இப்படி தூங்கறீயே உத்தி, எழுப்ப எழுப்ப எழுந்தறிக்காம......" என்று கோபத்தோடு பேச அவளின் கண்களில் நீர் நிறைய ஆரம்பித்தது. அதை கண்ட அன்னையின் மனம் பாகாய் உருக

"சரி..... சரி..... சீக்கரம் கிளம்புமா..... டைம் ஆகுதுல்ல...... குளிச்சுட்டு சூடா உனக்கு பிடிச்ச Bru coffee போட்டு வைக்கறேன் வந்து குடி சரியா?... போ..."என்று சமாதானபடுத்த அவரது கண்களை ஒரு நிமிடம் உற்று பார்த்தவள் இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள். சரஸ்வதி அவளின் தலையை வருடி விட்டவர்

"என்னடா நைடெல்லாம் அம்மா....அம்மா னு உளறிகிட்டு இருந்த..... கெட்ட கனவு கண்டயா?........ " வேற எதும் உளறிருப்பேனா என்று பயந்தவள், எல்லாமே கனவாக இருந்தால் நன்றாகதான் இருக்கும் என்று விரக்தியோடு நினைத்தாள் எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காண்பிக்காது மறைத்தவள்,பின் அன்னையை பார்த்து

"தெரியல மா..... சரி நான் குளிச்சுட்டு வரேன்...." என்று குளியலறை புகுந்தாள். மறுபடியும் ஒரு மூச்சு அழுது தீர்த்தவள், குளித்துவிட்டு வந்தாள். அன்னை தந்த காபியை தனது தெம்பிற்காய் குடித்து முடித்தாள்.


காலை எழுந்த சரணுக்கு இரவு நடந்த அனைத்தும் ஞாபகம் வந்தது. ஒரே ஒரு நிமிடம் தவறாக பேசிவிட்டோமோ என்று நினைத்தவன், அதன் பின் தான் ஒன்றும் பொய் சொல்லவில்லையே எது நடந்தாலும் நடக்கட்டும் என்று அலட்சியமாக நினைத்தான். ராஜாத்தி அவனை அவசர படுத்த தயார் ஆனான்.

விஜியும்,கீர்த்தியும் அதை எடு இதை எடு என்று அறையையே அலங்கோல படுத்திகொண்டிருக்க உத்ரா அமைதியாய் கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். தாங்கள் தயாரான பின்னும் இன்னும் அவள் அப்படியே இருப்பதை பார்த்த இருவரும் சேர்ந்து அவளை அலங்கரித்து தயார்ப்படுத்தினர்.

"ஏய் உன் ஆளு இப்போ மட்டும் இப்படி பார்த்தாரு அவ்வளவு தான்........" கீர்த்தி

" என்ன டி நாங்க சொல்லிகிட்டே இருக்கோம் பேசவே மாட்டேங்குற ......... சரண் ஞாபகம் வந்திடுச்சா?" என இருவரும் மாறி மாறி வம்பிழுத்த போதும் ஒன்றுமே பேசவில்லை அவள். மூவரையும் பார்த்த பெற்றவர் நால்வருக்கும் கண்களில் நீர் கோர்த்தது வாழ்த்தினர்.

மேடையில் ஆறு நாற்காலிகள் போடப்பட்டிருக்க ஆண்கள் இருவரையும் முதலில் அங்கு நிற்கவைத்தனர். பின் பெண்களிருவரையும் அழைக்க மெல்லிய ஒப்பனைகளுடன் வந்த இருவரையும் பார்த்த இருவரும் மயக்கம் போடாதது ஒன்று தான் குறை. அவர்கள் அழகில் மயங்கினர்.


காலையிலிருந்து திருட்டுதனமாக கீர்த்தியை பார்க்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை விக்கியால் இப்போது அவளை விட்டு கண்களை அகற்ற முடியாமல் நின்றிருந்தான். அவனை பார்த்தவள் யாருமறியாமல் கண்ணடிக்க அவ்வளவுதான் அப்படியே மேடையில் பக்கதில் நண்பர்கள் மட்டும் இல்லையென்றால் அவளை ஒடிசென்று தூக்கி தட்டமாலை சுத்தி இருப்பான். கீர்த்தியை அவனருகில் கொண்டுவந்துவிட்ட உத்ராவும், விஜியும் , அவனின் நிலை கண்டு சிரிக்க அசடு வழிந்தான் விக்கி.

உத்ராவை கொண்டு போய் சரண் அருகில் நிற்க வைத்துவிட்டு ஓரமாய் வந்து நின்றுகொண்டாள் விஜி. சரண் உத்ராவை ஒரகண்ணால் பார்க்க அவளோ அருகிலிருப்பது பெண்ணா அல்லது பொம்மையா என்று எண்ணுமளவுக்கு உணர்ச்சியின்றி முகத்தில் இறுக்கத்துடன் நின்றிருந்தாள்.திடீரென அவள் முகம் மலர்வதை கண்டு அவள் கண்கள் சென்ற திசையை பார்த்தான்.அவள் விஜியை ஒரு முறை பார்த்துவிட்டு பின் வாசலை பார்த்தாள், அங்கு ரிஷி வந்து கொண்டிருந்தான். இவனது முகம் கடுகடுத்தது. 'என்னை கண்டால் வராத சிரிப்பு அவனை கண்டால் மட்டும் வருகிறதோ' மனதில் அவளுக்கு அர்சனை நடத்தினான்.

விஜியை பார்த்துவிட்டு உத்ராவின் அருகில் வந்தவன், காதில் கைவைத்து தோப்புகரணம் போடுவது போல் பாவனை செய்துவிட்டு

" சாரி ....... சாரி .....கொஞ்சம் லேட் ஆகிடுச்சு...." என அவனை அடிக்க கை ஓங்கிவிட்டு இறக்கிகொண்டாள்.

"சரி... போ... ஓடு ...." என்று அவனை அவசர படுத்தினாள். அவனும் தலையாட்டிவிட்டு ஒடிவிட்டான்.

அதற்குள் அங்கு வந்த கண்ணன் நிச்சயத்திற்கு வந்திருந்தவர்களிடம் ஏதோ அறிவிப்பதை போல் பேசினார்.

" நால்பேர் உட்காரதுக்கு எதுக்கு இங்க ஆறு chair போட்டிருக்கீங்கனு நிறைய பேர் கேட்டுடீங்க, ஏன் ஆறு chair போட்டீருக்கோம்னா ............. இப்போ நடக்க இருக்கிற நிச்சயம் ரெண்டு ஜோடிக்கு இல்ல ........... மூணு ஜோடிக்கு, மூணாவது ஜோடி யாருனா என் பொண்ணு விஜியும் " மாப்பிள்ளை கோலத்தில் வந்த ரிஷியை அழைத்து " இந்த ரிஷியும் தான்" என ஒரு சிலரை தவிர அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

விஜி அப்படியே சிலையென நிற்க உத்ரா அவளருகில் சென்று

" ஏய் ......." உலுக்க சுயநினைவிற்கு வந்தவள் தோழின் தோள்களில் அப்படியே சாய்ந்து கண்கலங்கினாள். கண்களை மென்மையாக துடைத்துவிட்டவள்

"என்ன டி ..... இதுகெல்லாம் போய் கண்கலங்கிட்டு...." என்றாள். விஜிக்கு வார்த்தைகளே வரவில்லை. அவளருகில் வந்த கண்ணன்

" சந்தோஷமா....." என அவரை கட்டிகொண்டாள் "சரி போய் அங்க நில்லு போ" என உத்ரா அவளை அழைத்து போய் ரிஷி அருகில் நிற்கவைக்கும் போது ஓடிவந்த கீர்த்தி ரிஷியிடம்

"ரிஷி அண்ணா..... நீங்க விஜியக்காவ கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?... என் கிட்ட சொல்லவே இல்ல...."

"ம்ஹும்.... அக்கா இல்ல அண்ணி சொல்லு....... எல்லாம் உங்க அக்கா கட்டளை...." என்று அவளை மாட்டி வைத்தான். கீர்த்தி அவளை முறைக்க

"எல்லாம் விஜிக்கு ஒரு சப்ரைஸ் கொடுக்க தான் ......, ரிஷி என் ஃப்ரண்ட உன் கிட்ட ஒப்படைச்சுட்டேன்..... நீயாவது அவள நல்லா பார்த்துக்கோ என்ன?"

"கவலையே படாத........... போ......போ... அங்க உங்க ஆள் waiting...." என இதுவரை இருந்த சந்தோஷம் வடிந்து போய் அமைதியாய் அவனருகில் நின்றாள். அவனது நிலையோ பரிதாபமாக இருந்தது. ரிஷிக்கு விஜிக்கும் நிச்சயம் என்ற அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் கீர்த்தி ரிஷியை அண்ணாவென்றழைத்து அதிர்ச்சியாக்கி விட்டாள்.அதிர்ச்சிக்கு அதிர்ச்சியில் நிலைகுலைந்து நின்றிருந்தான்.

விஜிக்கு ஒரு நெக்லஸை தங்கள் பரிசு என உத்ரா குடும்பநண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி இருந்த தம்பதிகள் அணிவிக்க 'இவர்கள் ஏன் தனக்கு பரிசளிக்கின்றனர்' என்று குழப்பத்தோடு இருந்தவளிடம் ரிஷி இவர்கள் என் பெற்றோர் என்று அறிமுகபடுத்தினான். அவளை திருஷ்டி கழித்து முத்தமிட்ட லட்சுமியம்மாள்

" ரொம்ப அழகா இருக்க டா ........ என் கண்ணே பட்டுடும் போல இருக்கு" என்றார். முகுர்த்த நேரம் நெருங்குகிறது என்று ஐயர் சொல்ல நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டு தட்டு மாற்றி கொள்ளப்பட்டது. விக்கியின் சார்பாய் கண்ணன் - பிரபாவதி தட்டை மாற்றிகொண்டனர். நிச்சயம் நல்லபடியாக முடிய பெரியவர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து மனநிறைவுடன் பேசிகொண்டிருக்க , அவர்களுக்கு பின்னால் சற்று தள்ளி இவர் ஆறு பேரும் அமர்ந்திருந்தனர்.

விஜி உத்ராவை முறைக்க , எதற்கு முறைக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட உத்ரா முத்து பற்கள் தெரிய சிரித்தாள்.

" முறைக்காத டி ...... சும்மா........ சப்பரைஸ் .......... எப்படி இருக்கு" என அவளுக்கு இரண்டு அடிகளை கொடுத்தாள் விஜி, அதையும் வாங்கிகொண்டு சிரித்தாள் உத்ரா. அவள் சிரிப்பதையே பார்த்துகொண்டிருந்தான் சரண், அதை பார்த்த கீர்த்தி

"என்ன மாமா இப்படி பார்க்கறீங்க...........விட்டா எங்க அக்காவ அப்படியே முழுங்கிடுவீங்க போல...."

"ம்..... உங்க அக்காவுக்கு சிரிக்க கூட தெரியுமானு பார்க்கறேன்....."

"ஏன் நீங்க பார்த்ததில்லையா......"

"எங்க என்ன பார்க்கும் போது மட்டும் உம்னே இருக்கா.." என்று பெருமூச்சுவிட (நீ செஞ்சதுக்கு அதுவே ஜாஸ்தி)

"ஏன் டி மாமா இவ்வளவு ஆசைப்படுறார் இல்ல ஒரு ரொமண்டிக் லுக் விடு" என அனைவரும் ஒருசேர நகைத்தனர். வலிய சிரிப்பை வரவழைத்து சிரித்தவள், விக்கியிடம்

"சாரி விக்கி...... உன் கிட்ட சொல்லகூடாதுனு இல்ல ....... சும்மா ஒரு விளையாட்டுக்காக தான் சொல்லல, தப்பா நினைச்சுகாத.." என

" ஏய் என்ன பெரியவளாட்டம் மன்னிப்பெல்லாம் கேட்குற, இதெல்லாம் சாதாரண விஷயம்......."

"இல்ல அதுனால பின்னாடி பிரச்சனை வரகூடாது பாரு அதான்.... சரிவிடு...." சரணை பார்த்தபடியே சொன்னாள்.சிறிது நேரம் அங்கு மவுனம் நிலவியது. உத்ராவிற்கு அங்கிருப்பது என்னவோ போல் இருக்க

" எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது.......... நான் ரூம்ல இருக்கேன்...." என்று எழுந்து சென்று விட்டாள்.


அவள் சென்ற சிறிது நேரத்தில் சரணும் எழுந்து சென்றான். நால்வரும் தங்களுக்குள் சிரித்து கொண்டனர். பின் ரிஷியும் - விஜியும் மாடிக்கு நழுவினர்.கீர்த்தியும் விக்கியும் அங்கேயே அமர்ந்து பேசிகொண்டிருந்தனர்.

நான் என்பதே நீயல்லவா - 18

உத்ரா சரணின் புகைபடத்திடம் தினமும் மானசீகமாக பேசுவதும், தன் ஆசைகளை சொல்வதும் வாடிக்கையானது. நிச்சயநாள் என்று வரும் எப்போது அவனை பார்ப்போம் என்று காத்திருக்க ஆரம்பித்தாள். எதை எதிர்பார்க்கிறோமோ அது அவ்வளவு சுலபத்தில் நடப்பதில்லை.அதுபோலவே நாட்களும் நகர்வேனா என்று ஆமை வேகத்தில் நகர ஆரம்பித்தது.

நிச்சயத்திற்கு புடவை எடுப்பது, மண்டபம் பார்ப்பது, அனைவரையும் அழைக்க செல்வது, மூன்று பெண்களுக்கும் காவலாய் கடைவீதிக்கு அழைத்து செல்வது என எப்போதும் விக்கி அந்த ஐந்து நாட்களாய் கீர்த்தி வீட்டிலேயே இருக்க , விஜியும், உத்ராவும் அவனை கேலி செய்தே வதைத்துகொண்டிருந்தனர். விஜியும் இவர்களுக்கு துணையாய் கீர்த்தி வீட்டில் தான் இருந்தாள். விக்கியும், விஜியும் தூங்குவதற்கு மட்டுமே அவரவர் வீட்டிற்கு சென்றனர். மற்ற நேரமெல்லாம் கீர்த்தி, உத்ராவுடன் தான்.


விஜிக்கு ஒரு ஒரத்தில் வருத்தமிருந்தாலும், மகிழ்ச்சியாகவே இருந்தாள். சரண் மனைவியாய் தன் தோழி தன் வீட்டிற்கு வரபோகிறாள் என்ற சந்தோஷம் ஒரு புறம் இருக்க, உத்ரா ரிஷியை விரும்பவில்லை என்ற மகிழ்ச்சி தான் அவளை துள்ளிகுதிக்க வைத்தது. நிச்சய வேலைகளில் பாதியை அவளே எடுத்து செய்தாள்.அவ்வபோது ரிஷியை பற்றி மறைமுகமாக உத்ராவிடம் கேட்பாள். உத்ராவிடமிருந்து மறந்து கூட ரிஷிபற்றி ஒரு வார்த்தை வராது , ஏமாந்துபோவாள்.


நிச்சயத்திற்கு என்று மூன்று பெண்களுக்கும் ஒரே மாதிரியான சேலைகள் எடுக்கப்பட்டது. தனக்கு வேண்டாம் என்று விஜி எவ்வளவோ மறுத்தும் வற்புறுத்தி வாங்கி தந்தனர்.புடவை எடுக்க, நகை எடுக்கவென்று எப்போது குடும்பத்தோடு கிளம்பினாலும் இவர்களுடன் இன்னுமொரு தம்பதிகள் வருவார்கள். விஜியோ, விக்கியோ யாரென்று கேட்டால் உத்ரா குடும்பநண்பர்கள் என்று மட்டும் சொல்லுவாள் , வேறு எதுவும் அதிகம் அவர்களை பற்றி சொல்லமாட்டாள்.

அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிச்சய நாளும் வந்தது. இரு பெண்களின் நிச்சயம் என்பதால் வீட்டில் வைக்காமல் ஒரு சின்ன மண்டபத்தில் நிச்சயத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.மண்டபம் தொலைவு என்பதாலும், காலையில் 10.00 மணிக்கே நிச்சயம் என்பதாலும் முந்தின நாள் இரவே அனைவரும் மண்டபத்தில் தங்கிவிட்டனர்.


எப்போதும் போல் சரணின் புகைப்படத்திடம் பேசிகொண்டிருந்த உத்ராவை தொலைபேசி தொல்லை செய்ய கோபத்தோடு யார் அழைப்பது என்று பார்த்தவள் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து தான் போனாள். சரணின் மொபைலிருந்து அழைப்பு வந்திருந்தது. விஜி தானாகவே சரணின் நம்பரை உத்ராவிற்கு பதிவு செய்து கொடுத்திருந்தாள். ஆனால், உத்ரா தான் ஏதோ தயக்கத்தில் அவனிடம் இதுநாள் வரை பேசவில்லை. இன்று அவனிடம் இருந்து அழைப்பு வரவும் கனவா நிஜமா என்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். மறுமுறை அடிக்கவே அவசரமாக அதை எடுத்தவள், படபடக்கும் இதயத்தோடு அதை காதிற்கு கொடுத்து

"ஹலோ.." என்றாள். மறுபக்கதிலிருந்து பதில் வராமல் போகவே மறுமுறை ஹலோ ஹலோ என

"ம்.. கொ..கொஞ்சம் மாடிக்கு வா.." என்று விட்டு அவள் பதிலுக்காக காத்திருக்காமல் போனை வைத்துவிட்டான்.

'இல்லை வேண்டாம் எதுவாக இருந்தாலும் போனிலேயே சொல்லுங்கள் என்று சொல்லவந்தவள்' அவன் போனை வைத்துவிடவும் அப்படியென்ன அவசரம் என செல்லமாய் மனதினுள் கடிந்து கொண்டாள். எதற்காக கூப்பிட்டு இருப்பான்...... சரி.... எப்படியும் அவனுக்கு இந்த திருமணத்தில் சம்மதமா என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேனே அதையாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போதே ஒரு மனம் சம்மதமில்லாமலா நிச்சயம் வரை வந்திருக்கும் என்று இடிதுரைத்தது. ஏதே ஏதோ கற்பனைகளோடு மாடிக்கு சென்றாள். சரண் அங்கு இவளுக்கு முதுகை காண்பித்தபடி நின்றிருந்தான். அவள் வந்திருப்பதை அறிவிக்க தொண்டையை செறுமினாள். அவன் திரும்பி இவளை பார்த்தான்.

அவனது கண்களிலிருந்த சிவப்பும், முகத்திலிருந்த வியர்வை முத்துகளும், அவளை நோக்கி வந்த ஒருவித வாடையும் சொல்லியது, அவன் மது அருந்தியிருக்கிறான் என்று. அதிர்ச்சியானாள் இவன் குடிப்பானா? இல்லை யாரெனும் வற்புறுத்தி குடிக்க வைத்திருப்பார்களா?, இந்த நேரத்தில் அதுவும் இந்த நிலையில் தன்னை எதற்காக இங்கு அழைத்தான் என்று தன் சிந்தித்து கொண்டிருந்தவளை சரணின் குரல் நினைவுலகுக்கு கொண்டுவந்தது.

"என்ன நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ ஒன்னும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்"

"என்ன கேட்டீங்க"

"அத கூட காதுகொடுத்து கேட்கலயா?"

"இல்ல எதோ யோசனை அதான்.....நீங்க பேசினது கேட்கல"

"அப்படியென்ன யோசனை இந்த குடிகாரனுக்கு பதிலா அந்த............ யாரவன்....... ரிஷி.........ரிஷி..... அவனயே கல்யாணம் பண்ணிகலாம் னா?"ஆழ்மனதிலிருந்த கோபமோ இல்லை உள்ளே சென்ற மதுவின் வேலையோ தன்னையும் அறியாமல் அவளை வார்த்தைகளால் தாக்கினான்.

" சரண்..............." கிட்ட தட்ட கத்தினாள்.

"சரண் தான்......... எப்படி டி உங்களால முடியுது ........ ஒருத்தன காதலிக்கவும்.... இன்னோருத்தன கல்யாணம் பண்ணிக்கவும்......... கேவலமா இல்ல......."

அதற்குமேல் அவளால் அங்கிருக்க முடியவில்லை, விடு விடுவென படியிறங்கி சென்றுவிட்டாள். அவர்கள் அறைக்கு சென்றாள். அனைவரும் உறங்கியிருந்தனர். தனது இடத்தில் அமர்ந்தவள் அதற்கு மேல் தாங்காது என்பதை போல் சத்தமின்றி அழ ஆரம்பித்தாள். இந்த பத்து நாட்களில் எத்தனை கணவு கண்டிருப்பாள், எவ்வளவு கோட்டைகள் கட்டி இருப்பாள், அத்தனையும் அத்தனையும் ஒரு ஐந்து நிமிடத்தில் சுக்குநூறாய் உடைந்ததை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.


காலையில் நிச்சயம் என்ன செய்ய போகிறேன்?. கல்யாணம் என்பதற்கு அடிப்படையே நம்பிக்கை தான், அது இல்லாதவனோடா இனி வாழ்கையை வாழ போகிறேன், இல்லை மாலை இந்த மண்டபதிற்குள் நுழையும் போது பெற்றவர்களின் கண்களில் கண்ட சந்தோஷத்தை அழித்து தன்னை பற்றிய கலக்கத்தை கொண்டுவரபோகிறேனா? என்ன செய்ய போகிறேன்?....... கடவுளே எனக்கு மட்டும் ஏன் ஒரு சந்தோஷத்தையும் கொடுத்தை அதை அனுபவிக்க முடியாத படி ஒரு துன்பத்தையும் கொடுத்துவிடுகிறாய்......... இப்படியெல்லாம் மனதில் அரற்றியபடி தன்னையும் அறியாமல் உறங்கி போனாள்.

நான் என்பதே நீயல்லவா - 17

உத்ரா கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தை கண்ணனுக்கு சொன்னார் மல்லிகார்ஜுன்.பின் அவருக்கு ஒரு யோசனை தோன்ற விக்கியை தொலைபேசியில் தொடர்புகொண்டு காலையில் வந்து தன்னை பார்க்குமாறு தெரிவித்தார்.சரண் சென்னை திரும்பி இருந்தான், ராஜாத்தியும் பெருமாளும் முடிவை தெரிந்து கொண்டு வருவதாக சொல்லிவிட்டனர். இப்போது அவர்கள் மட்டும் சென்று பெண் பார்த்து வருவதாக முடிவாயிற்று.

காலையில் மல்லிகார்ஜுனை சந்திதான் விக்கி.

"என்ன மாமா வர சொன்னீங்க?"

"இல்ல விக்கி..... நம்ம உத்திக்கு ஒரு இடம் முடிவாகி இருக்கு......"

"அப்படியா...... நல்ல விஷயம் மாமா ... யாரு மாமா?"

"நம்ம விஜி இருக்கால அவ பெரிப்பா பையன் பேரு சரண்.....நாளைக்கு உத்திய அவங்க அப்பாவும் அம்மாவும் பாக்க வராங்க"

"ரொம்ப நல்லது மாமா.....நான் வந்துடறேன் மாமா"

"அதான் அவங்க கல்யாணத்தோட , உங்க கல்யாணத்தையும் வைச்சுகலாம்னு நினைக்கறேன் நீ என்ன பா சொல்லுற..?"

" அதில்ல மாமா .....கீர்த்தி படிப்பு முடியட்டுமே........"

"கல்யாணம் பண்ணிகிட்டு படிக்கட்டும் ...... நீ வேண்டானா சொல்ல போற......"

"இல்ல மாமா ..... அது...."

"ரெண்டு பொண்ணு கல்யாணத்தையும் ஒன்னா நடத்தி பாக்கனும் போல இருக்கு விக்கி .... ப்ளிஸ்."

"ப்ளிஸ் எல்லாம் எதுக்கு மாமா...... உங்க இஷ்டம்....." அதற்கு மேல் அவனால் மறுக்க முடியவில்லை.


அடுத்த நாள் மாலை உத்ராவை பார்க்க ராஜாத்தி,பெருமாள்,கண்ணன்,பிரபாவதி,விஜி என அனைவரும் வந்திருந்தனர்.சம்பிரதாயத்துகாக மட்டுமே இந்த பெண் பார்க்கும் படலம், ஏற்கனவே உத்ராவை பாத்திருந்ததால் ராஜாத்தி-பெருமாள் இருவருக்கும் இந்த கல்யாணத்தில் பரிபூர்ண சம்மதமே. அழகாய் பட்டு உடுத்தி , அளவான நகைகள் இட்டு, மிதமான ஒப்பனையுடன் இருந்த உத்ராவை பார்க்க அங்கிருந்த பெரியவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்தது. கீர்த்தியும், விக்கியும் இந்த உலகத்திலேயே இல்லை. அன்று கீர்த்தியும் இன்னோரு மணபெண் போல் இருக்க வைத்த கண்னை எடுக்காமல் எடுக்கமுடியாமல் அவளை பார்த்துகொண்டிருந்தான் விக்கி. இருவரும் வேறுலகில் இருந்தனர்.


உத்ராவின் கண்களோ சரணை காணாமல் தேடி கொண்டிருந்தன. அதை பார்த்த ராஜாத்தி அவளை அருகில் அழைத்து முகத்தை திருஷ்டி கழித்து

" தேவதை மாதிரி இருக்க டா...." என்று அவள் கன்னத்தை சிவக்கவைத்து விட்டு பின்

" கவலைபடாத சரண்ன நிச்சயத்தனைக்கு பார்த்துகலாம் சரியா?" என அங்கிருந்தவர்கள் அனைவரும் நகைத்தனர். ராஜாத்தி அவளின் காதருகில் சென்று

"அதுவரைக்கும் இத வைச்சுக்கோ" என்று ஒரு போட்டோவை யாருமறியாமல் அவளின் கையில் திணித்தார். அதை யாருமறியாமல் பத்திரபடுத்தினாள். அனைவரின் மனநிலை சந்தோஷ்மாக இருந்தது.

விஜியின் நிலை தான் பாவம், தோழி தனக்கு அண்ணியாய் வர போவதற்கு சந்தோஷபடுவதா, இல்லை ரிஷிக்காக வருத்தபடுவதா என்று தெரியாமல் தவித்துகொண்டிருந்தாள்.அதனை கவனித்தவள் ஒரு மர்ம புன்னகை சிந்தினாள்.

இன்றிலிருந்து பத்துநாட்கள் கழித்து நிச்சயமும், நிச்சயம் முடிந்த ஒரு வாரத்தில் கல்யாணம் என்றும் முடிவானது. சரண் வீட்டில் சரண்-உத்ரா கல்யாணத்தோடு விக்கி - கீர்த்தி கல்யாணத்தையும் வைப்பதில் ஏதேனும் ஆட்சபனை உள்ளதா? என கேட்டுகொண்டனர். அவர்களுக்கும் அதில் சந்தோஷமே என்று விட,நிச்சயத்திற்கான வேலைகளில் இறங்கினர்.

Thursday, January 19, 2012

நான் என்பதே நீயல்லவா - 16

காலையில் கீர்த்தியின் வீட்டிற்கு விக்கி வந்திருந்தான்.வாசல் வரை வந்தவனால் முன் போல் குரல்கொடுத்துவிட்டு உள்ளே செல்ல முடியவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது தயங்கி நின்று கொண்டிருந்தவனை உத்ரா பார்த்துவிட்டாள்.தயக்கத்தை போக்கும் விதமாய்

"வாங்க மாப்பிள்ளை சார்........ உள்ளே வாங்க......" என்றழைத்தாள். தன்னை கிண்டல் செய்வது புரிந்து மெல்ல சிரித்து தயக்கத்தோடே உள்ளே வந்தான்.

"அம்மா........அப்பா......... யாரு வந்துருக்காங்க பாருங்க...." என்று உள்ளே குரல் கொடுத்தாள்.இவள் குரல் கேட்டு வெளியே வந்த தந்தையிடம் கண்ணடித்து சைகை செய்தாள்.புரிந்து கொண்டவராய்

"அடடே ......... மாப்பிள்ளை .... வாங்க மாப்பிள்ளை....... எப்படி இருக்கீங்க? " என்றார்.

"மாமா என்ன இது?......." இதையெல்லாம் கேட்டுகொண்டே கையில் காபியோடு வெளியே வந்த சரஸ்வதி அவர் பங்குக்கு

"வாங்க மாப்பிள்ளை ....... இந்தாங்க எடுத்துக்கோங்க.." என்று காபியை அவனுக்கும் மல்லிகார்ஜுனுக்கும் கொடுத்தார்.

"என்ன அத்த நீங்களுமா?......எதுக்கு இந்த திடீர் மரியாதை எல்லாம்?"

"என்ன பண்ணறது எங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறவராச்சே....... மரியாதை கொடுக்கலனா கோவிச்சுக்க மாட்டீங்க......"

"மாட்டேன்... நீங்க பெயர் சொல்லி குப்பிடலனா தான் கோவிச்சுக்குவேன்....."

"அம்மா கூப்பிட்டுடு மா ....... இல்லனா கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லிட போறாரு........" என அதிர்ச்சியோடு உத்ரா சொல்ல அப்போது தான் அங்கு வந்த கீர்த்தி உட்பட அனைவரும் நகைத்தனர்.

"அதுக்கு ஏன் டி இப்படி அலறுற....... என்ன கல்யாணம் பண்ணிக்க வேற ஆளா கிடைக்க மாட்டாங்க..." என்று விக்கியை பார்த்தபடியே சொன்னாள் கீர்த்தி.

"மாட்டாங்கனு தான பயபடுறேன்.... இந்த மாதிரி இளிச்சவாயன நான் எங்கனு போய் தேடுறது......" விக்கியை கை காட்டி சொல்ல

"என்ன சொன்ன.......... நில்லு டி ஒடாத" தந்தையின் பின் ஒளிந்துகொண்டவளை பார்த்து " வந்துடு......நீயா வந்தினா பொழச்ச இல்ல அவ்வளவு தான்..... விடுங்க பா அவள..."

"விக்கி நல்லா யோசிச்சுகோ...........இல்ல.. தினமும் இப்படி தான் அடிவாங்கனும்........ "

"நீ சொல்லறது சரி தான் போலிருக்கு......... உத்தி...... கொஞ்சம் யோசிக்கனும்......"

"ஓ......... யோசிப்பீங்க..........." என்று அவனுக்கு ஒர் அடி வைக்க

"என் பொண்ணு என்ன குறைச்சல்......... என்ன கொஞ்சம் கை வாயும் அதிகம்....... அவ்வளவு தான்......." சரஸ்வதி சொல்ல

"அதுவும் என் பொண்ணுக்கு அழகுதான் தெரிஞ்சுக்கோ...... விக்கி...... நானேல்லாம் வாங்கறதில்லையா இதெல்லாம் லவ்வுல சாதாரணமப்பா......." என்று கண்ணடித்து மல்லிகார்ஜுன் சொன்னார்.

வரும் போதிருந்த தயக்கம் மறைந்து அங்கு அவனும் ஒருவன் என்ற எண்ணமே விக்கிக்கு மேலிட்டது.சந்தோஷமாய் முவரும் ரயில் நிலையம் வந்தனர்.இவர்களுக்காய் படபடப்புடன் காத்திருந்தாள் விஜி.ரயிலில் ஏறியதும் உத்ராவோடு தனியாய் அமர்ந்துகொண்டாள்.உத்ராவும் விஜியிடம் தென்பட்ட பதட்டத்தை பார்த்துகொண்டுதானிருந்தாள்.அவளாய் எதுவானாலும் சொல்லட்டும் என்று காத்திருந்தாள். அவள் வாய்திறக்காமல் இருக்கவே இவளே கேட்டாள்

" என்னடி வந்ததிலிருந்து எதுவுமே பேசமாட்டேங்கற?"

"ஒ.....ஒன்னுமில்ல டி, ஆமா ............. உனக்கும்....... சரணுக்கும்.......கல்யாணம்..." தயக்கத்தோடு

"ஆமா, அப்பா கேட்டாரு......." சற்று வெட்கத்தோடே

"நீ என்னடி முடிவு பண்ணீருக்க........."

"எனக்கு சம்மதம் டி......."கன்னம் சிவந்தது அவளுக்கு

"சம்மதமா?....... உண்மையா சம்மதமா டி ....... மனசார தான சம்மதிக்கற....?

"ஆமா டி அதிலேன்ன உனக்கு சந்தேகம்? எனக்கு சரண பிடிச்சிருக்கு...... எல்லாத்துக்கும் மேல நீ என்னோட நாத்தனாரா வரும் போது எனக்கு சம்மதமில்லாமலா போகும்......."

"...................."

"விஜி ....... உனக்கு இதுல இஷ்டம் இல்லையா டி........இல்லனா சொல்லு........நான் இன்னும் அப்பாகிட்ட எதுவும் சொல்லல....... வேண்டாம்னு சொல்லிடறேன்........" மெய்யான வருத்தோடு சொன்னாள்.

"ச்..ச..ச... என்ன டி நீ எனக்கு அண்ணியா வந்தா முதல்ல சந்தோஷபடற ஆள் நானாதான் இருப்பேன்...... எனக்கு இதுல ரொம்ப சந்தோஷம் டி.." இத்தோடு அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

இரவு முடிவு கேட்ட தந்தையிடமும் சம்மதம் என்றே கூறினாள்.பெற்றவர்கள் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. கடவுளே இந்த திருமணம் நல்லபடியே நடக்க அருள்புரி என்று வேண்டிகொண்டது........

ஆனால் இந்த கல்யாணம் நடக்குமா?..................................

நான் என்பதே நீயல்லவா - 15

சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நேரம் மல்லிகார்ஜுன் உத்ராவை அழைத்தார்.

"உத்தி கீர்த்தி என்ன பண்ணறா?"

"நல்லா தூங்கிட்டு இருக்கா பா"

"ம்........ வேற எதும் சொன்னாளா?"

"ரொம்ப பயந்துட்டா பா, ஆனா இப்ப o.k"

"சரி..... உன் கிட்ட ஒன்னு சொல்லனும் டா"

"சொல்லுங்க பா......"

"கண்ணன் போன் பண்ணாரு..........."

"என்ன விஷயமா பா அதுவும் இந்த நேரத்துக்கு....."

"சாயந்திரமே பேசினாரு மா....... அவரோட அண்ணன் பையன்........ சரணுக்கு உன்ன கேட்டாங்க டா....... பையனும் நல்லவன் தான் ....... நல்ல குடும்பம்........ தெரிஞ்ச குடும்பமும் கூட....... நீ என்ன டா சொல்லுற....?" அவளுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை சரணுக்கா? அதிர்ச்சி... குழப்பம் என மாறி மாறி கேள்விகள் தான் தோன்றின.அதில் முக்கியமாக தோன்றியது விஜி பற்றியது. அதை மட்டும் தன் தந்தையிடம் கேட்டாள்.

"நான் நாளைக்கு சொல்லட்டுமா பா?..........."

"எப்ப வேணா நல்லா யோசிச்சே சொல்லு......."

"அப்பா சரணுக்கு பார்க்கறங்க னா விஜிக்கும் பார்ப்பாங்க இல்ல...."

"ஆமா..... "சிறிது யோசனைக்கு பின் "விஜியும் ரிஷியும் சந்திச்சுகிட்டாங்களா...?"

"இல்ல பா....... ரிஷி பெங்களுர் போய்ருக்கான்....."அதற்கான அவசியத்தையும் சொன்னாள்

"ஒ....... சரி விடு சீக்கரம் கிளம்பி வர சொல்லு பாத்துகலாம்....."

"ம்..... good night பா..."

"எதையும் யோசிகாம தூங்கு,காலைல யோசிச்சுகலாம்.... good night ....."

"சரி பா.... good night மா" தூங்க சென்றாள். தூக்கம் தான் வரவில்லை மனதில் இத்தனை கேள்விகள் இருக்கும் போது எப்படி தூக்கம் வரும்...

சரணுக்கா? எப்போதும் திட்டும் அவனுக்கா? இது அவனுக்கு தெரியுமா? ஒருவேளை அவன் தன்னிடம் விளையாடி இருப்பானோ? போனதடவை கூட ஏதோ சொன்னானே? அன்று ஏன் அப்படி நடந்து கொண்டான்? விஜிக்கு தெரியுமா? தெரிந்திருந்தால் கேட்டிருப்பாளே? இப்படி கோர்வையேயின்றி கேள்விகள் தோன்ற முதலில் எழுந்தமர்ந்து ஒரு ஸ்லோகத்தை மனதை ஒருநிலைபடுத்தி சொல்லிமுடித்தாள். கேள்விகள் மறையவில்லை தான் ஆனால் ஒரு தெளிவு கிடைத்தது.முதலில் எங்கிருந்து யோசிப்பதென்ற தெளிவு.முதலில் சரண் தன்னிடம் பழகிய நேரங்களை மனதில் ஒட்டி பார்த்தாள்.

முதல்முதலில் அவனை பார்த்தபோது தோன்றிய அனுபவத்தையும் ஆராய்ந்தாள்.அன்று அவனுடைய குறும்பும், கண்ணியமான பார்வையும், கல கல பேச்சும் உள்ளம் கவர்ந்தது என்னவோ உண்மைதான்.கோபத்தில் அதையெல்லாம் அவள் அன்று கண்டுகொள்ளவில்லை.ஆனால் இன்று அவளுக்கு இனித்தது அவனது செய்கை.அன்றய பொழுதில் இனிமையானவனாக தெரிந்தவன் முந்தினம் தன்னிடம் ஏன் அப்படி கேட்டான்? என்று விளங்கவில்லை அவளுக்கு.ஏதெனும் கோபமாக இருக்கும் என்று சமாதானமடைந்தாள்.அவனை தனக்கு பிடித்திருக்கிறது என்று கண்டு கொண்டாள். விஜிற்கு அண்ணியாய் மனதிற்கு பிடித்தவனின் மனைவியாய் செல்வதில் அவளுக்கு ஏக சந்தோஷம் தான். ஆனால், அவனது மனநிலையையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்துகொண்டாள்.

அடுத்த பிரச்சையான விஜி விஷயத்திற்கு வந்தாள். என்ன செய்வதென்று யோசித்தாள்.ஏற்கனவே முடிவு செய்ததைபோலவே செய்யலாம்,ஆனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கரம் முடிக்கவேண்டும் இது குறித்து ரிஷியிடம் பேசவேண்டும் என்று மனதில் குறித்துகொண்டாள். சரண் தன்னிடம் பேசியது அவனது செய்கை என்று அவனை பற்றி யோசித்தபடியே உறங்கி போனாள்.அவனும் இவளைப்பற்றி தான் யோசித்துகொண்டிருந்தான்.


உத்ராவை அவன் முதலில் பார்த்தது விஜியின் வீட்டில் இல்லை அதற்குமுன்பே அவளை பார்திருக்கிறான்.ஒரு முறை விஜி வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் போது சிக்னலில் தங்கள் பஸ்சிற்கு பக்கதில் சிரிப்பு சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தான்.அங்கு ஒருவரோடு பேசியபடி உத்ரா தான் சிரித்து கொண்டிருந்தாள். லாவண்டர் நிறத்தில் அழகிய பூவேலைபாடோடு கூடிய சுடிதாரில் கண்களில் குறும்போடு குழந்தைதனமாய் கேள்விகள் கேட்டபடி அமர்ந்திருந்தவளின் அழகு அவனை ஈர்த்தது.அவர்களின் பேச்சிலிருந்து அவர் அவளின் தந்தையை என்றும் இருவருமாய் கோவிலிற்கு வந்திருப்பதும் தெரிந்துகொண்டான்.சிக்னலில் பச்சை விளக்கேறிய அவளை தவறவிட்டான்.அதிலிருந்து எப்போது திருப்பூர் வந்தாலும் அவளை தேடிவதை நிறுத்தவில்லை.விஜியின் வீட்டில் அவளை பார்த்தது ஆச்சரியம் தான் ஆனால் உடனே தன் மீட்டேடுத்துகொண்டான்.அவளின் உணர்வுகளை கண்டு ரசித்தான், அவளை சீண்டி ரசித்தான்.இன்று கண்ணன் பேச்சுவாக்கில் உத்ராவிற்கும் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று சொல்ல அவரிடமே தன் விருப்பத்தை முதலில் தெரிவித்தான்.அவனது வீட்டில் அனைவருக்கும் இது சந்தோஷமான முடிவாகதான் இருந்தது.அதனாலயே உடனே மல்லிகார்ஜுனிடம் பேசிவிட்டார் கண்ணன்.

ஆனால் இந்த செய்தி ஒருவருக்கும் மட்டும் மகிழ்ச்சியை தரவில்லை.........................

Friday, January 13, 2012

தை திருநாள்

தமிழர் திருநாளாம் தை திருநாள்
தம் முன்னோரை போற்றும் நன்நாள்
மூன்று நாட்களாய் கொண்டாடபடும் முத்தான நாள்

வேண்டாதவையும், தீயவையும் கழித்திட
பழயவைகளை அழித்து கணக்கில்லா
போகி என்றோரு நாளும் உண்டு

முன்னோருக்கு முன்னோரான சூரியனை
போற்றி அவனுக்காய் பொங்கல் வைத்து
வணங்கி ஆசிபெற முதல் நாள்

வாழ்நாள் முழுவதும் நமக்காய் வாழ்ந்து
நமக்காய் அனைத்தையும் தரும் கோ வை
போற்றி ஆசிபெற இரண்டாம் நாள்

வரும் காலம் நல்லதாய் அமைய
நல்ல எண்ணங்கள் மேலும் பெருக
வேண்டிகொள்ள மூன்றாம் நாள்

இப்படியே நாமும் வணங்கி நல்லவை பல பெற்றிடுவோம்,
தீயவை முற்றிலும் அழித்திடுவோம்.........

இனிய பொங்கல் மற்றும் போகி நல் வாழ்த்துக்கள்.....

Thursday, January 12, 2012

நான் என்பதே நீயல்லவா - 14

வீட்டில் நுழையும் போதே தன் தந்தையின் காலணியை கண்டுவிட்ட உத்ரா சந்தோஷத்தோடு "அப்பா....... அம்மா......" என்று கூவியபடியே உள்நுழைந்தாள்.எதையோ தீவிரமாக யோசித்துகொண்டிருந்தவர்கள் இவளின் குரலில் கலைந்து முன்றைக்கு வந்தனர்.கீர்த்திக்கு என்ன தோன்றியதோ ஓடிசென்று தந்தையும் தாயையும் கட்டிகொண்டவள் கண்கலங்கினாள்.மல்லிகார்ஜுன் அவள் தலையை மெதுவாக வருடிவிட அவரின் தோளில் சாய்ந்தபடி

"நான் செஞ்சது தப்பா பா?"

"இல்ல டா எங்க பொண்ணு தப்பு பண்ணுவாளா? ம்...... நல்ல பையன தான் செலக்ட் பண்ணிருக்க."

"இல்ல அக்காவே லவ் பண்ணாம இருக்கும் போது நான் மட்டும் இப்படி பண்ணது தப்புதான பா"

"இவ ஒரு லூசு இவளுக்கு தான் தோணலனா உனக்கும் அப்படி இருக்கனும்னு அவசியம் இல்லயே" என்று கீர்த்திக்கு சப்போர்ட் செய்தார் சரஸ்வதி.அதை கேட்ட உத்ரா

"அட கடவுளே! இதென்ன கொடுமை எல்லோரும் காதலிச்சா தான் திட்டுவாங்க இங்கென்ன னா லவ் பண்ணலனு திட்டறாங்களே இந்த அநியாயத்த கேட்டக யாருமே இல்லையா?" என்று சோகமாக கேட்க

"என்ன பண்ணறது சரசு உத்தி என்ன மாதிரி அப்பா........வி" என்று சப்போர்ட் செய்தார் மல்லிகார்ஜுன். அதற்கு சரஸ்வதி

"யாரு நீங்க அப்பாவியா? தனியாளா சண்டியர் மாதிரி வந்து எங்கப்பாக்கிட்ட பொண்ணு கேட்டவர் தான நீங்க?" என இவர்கள் இருவரும் அப்படியா என்பது போல பார்த்தனர்.ஆம் என்பது போல் அவர் கண்சிமிட்ட

"அம்மா அம்மா அப்பறம் என்னாச்சுனு சொல்லுங்க மா" குழந்தை போல் கொஞ்சினாள் உத்ரா. கதை கேட்கவும் சொல்லவும் வசதியாய் அமர்ந்துகொண்டு தங்களின் காதல் கதை சொல்ல ஆரம்பித்தார் சரஸ்வதி.

"அப்பாவ நீங்க எப்ப பார்தீங்க மா" உத்ரா கேட்டாள்.

"ம்..... நம்ம ஊர்ல காணும்பொங்கள் அன்னைக்கு ஆத்து திருநாள்னு ஒன்னு நடக்கும்.ஊரே அங்கதான் கூடி இருக்கும். எல்லோரும் காலைலயே எழுந்து வீட்டுல சமைச்சு கட்டி எடுத்துகிட்டு ஆத்துகிட்ட இருக்கற மைதானத்துக்கு வந்துடுவாங்க.அங்க உஞ்சல் கட்டி சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வயதுவித்யாசம் இல்லாம உஞ்சல் ஆடி விளையாடுவாங்க.அதுமட்டுமில்லாம நிறைய விளையாட்டு இருக்கும் பெண்கள் ஒருபக்கமும் ஆண்கள் ஒருபக்கமும் விளையாடிகிட்டு இருப்பாங்க. இது போக வயசு பசங்க பொண்ணுங்களுக்குனு தனியா போட்டி கூட நடக்கும்.திருவிழவ விடகூட்டமா இருக்கும் நாங்க தொலைஞ்சு போகாம இருக்க எப்பவும் ப்ரண்ட்சோட தான் இருப்போம்.அங்க தான் உங்க அப்பாவ பார்த்தேன். நம்ம சத்தியராஜ் ஃபேன் ஆன உங்க அப்பா அதேமாதிரி hairstyle எல்லாம் பண்ணிகிட்டு கரும்பு உடைக்கற போட்டில 5 கரும்ப ஒன்னா உடச்சாரு பாரு........ , ஒரே கை தட்டல் மழை தான். அப்பறம் பாத்தா ஐயா எங்க பின்னாடியே சுத்திகிட்டு இருந்தாரு......."

"5 கரும்ப ஒன்னாவ எப்படி பா?" ஆச்சரியமாக கேட்டாள் கீர்த்தி.

"அப்ப எல்லாம் அவ்வளவு பலம் இருந்துச்சு டா"

"நீங்களும் அம்மாவ அங்க தான் பார்தீங்களா பா?" இது உத்ரா

"இல்ல நான் M.A கடலூர்ல படிச்சுகிட்டு இருந்தப்ப என் ப்ரண்ட் வெங்கடேஷ் கூட அடிகடி பண்ருட்டிக்கு வருவோம்.அவன் வீட்டு பக்கத்துல தான் உங்க அம்மா வீடும்.முதல் முறையா உங்க அம்மாவ பார்தப்ப ரெட்ட ஜடை போட்டுகிட்டு தாவணி போட்டுகிட்டு கழுத்துல ஒரே முத்துமாலை போட்டுகிட்டு சின்ன பொட்டு வைச்சுகிட்டு வேற எந்த மெக்கப்பும் இல்லாம அழகா கோவிலுக்கு போனா... அப்ப தான் உங்க அம்மாவ பார்த்தேன்...... . திருநாள்ள உங்கம்மா வ எதிர்பாக்கவே இல்ல தீடீர்னு வந்து முன்னாடி நின்னுட்டா......" என்று அந்த காலநினைவுகளில் பயணித்தபடியே சொன்னார்.


"அப்பறம்..........."


"அப்பறம் என்ன தினமும் எங்க வீட்டு வாசல தான் இருப்பாரு உங்க அப்பா..... நான் அப்பல்லாம் இவர மனசுக்குள்ள நல்லா திட்டுவேன். வந்துட்டான் பாரு வளந்துகெட்டவனு......"என்றார் சரஸ்வதி சிரித்தபடியே

"அப்பா நோட் திஸ் பாயின்ட் உங்கள எப்படியெல்லாம் திட்டிருங்காங்க பாருங்க பா" உத்ரா சொல்ல மல்லிகார்ஜுன்

"அவ கிடக்கறா குட்டச்சி" அவரை முறைத்து விட்டு தொடர்ந்தார் சரஸ்வதி

"அப்பறம் இந்த முஞ்சிய பாக்க பாக்க பிடிச்சு போச்சு , அப்பறம் உங்க அப்பா வந்து பொண்ணு கேட்டாரு எங்க அப்பாவுக்கு சம்மதம் தான்.ஆனா, எங்க அம்மாவுக்கும் கூடபிறந்தவங்களுக்கும் தான் சம்மதமில்ல அதனால அவங்க எதிர்த்துகிட்டு கல்யாணம் பண்ணிவைச்சாரு எங்க அப்பா. உங்க அப்பா வீட்டுலயும் யாருக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. அதுனால நாங்க யாருக்கும் கஷ்டம் கொடுக்காம இந்த ஊருக்கு வந்து எங்க வாழ்க்கைய ஆரம்பிச்சுட்டோம். அன்னைல இருந்து நான் உங்க அப்பாவுக்கும் துணை எனக்கு உங்க அப்பா துணை , எங்க ரெண்டு பேருக்கும் இப்போ நீங்க துணை" என்றார் கண்கலங்கிய படி அவரை ஆதரவாய் தோளோடு அணைத்துகொண்டார் மல்லிகார்ஜுன்.எவ்வளவு கஷ்டத்தை இப்படி ஒன்றாய் இருந்து அனுபவித்திருப்பார்கள்,கடந்து வந்திருப்பார்கள் என்று புரிந்தது. தங்கள் பெற்றோரை போல் வாழவேண்டும் என்று தோன்றியது இரு பெண்களுக்கும்.சூழ்நிலையை மாற்றும் விதமாய் உத்ரா

"ஏன் சத்தியராஜ் மாதிரியா இருப்பீங்க?"

"ஹ்ம்ம்.... ஆமா காலேஜ் படிக்கறப்ப நான் சத்தியராஜ் ஃபேன், அதே மாதிரி hair style எல்லாம் வைச்சுகிட்டு இருப்பேன், நூறாவது நாள் சினிமா பாத்துட்டு மொட்ட அடிச்சு அதே மாதிரி கண்ணாடி வாங்கி போட்டுகிட்டு வீட்டுக்கு போனா என்ன யாருக்கும் அடையாலமே தெரியல அப்பறம் புரியவைக்கறதுகுள்ள போதும் போது ஆடுச்சு........ ஹா..ஹா..... முடி வளர வரைக்கும் சொல்லி சொல்லி தீட்டினாங்க வீட்டுல......."


எல்லோரும் கற்பனை செய்து பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தனர் (அடி படலயானு எல்லாம் கேட்க கூடாது சரியா?). உலகின் மொத்த சந்தோஷத்தையும் குத்தகை எடுத்தது போன்ற மனநிலையில் இருந்தாள் உத்ரா. ஆனால் அது மல்லிகார்ஜுன் அந்த விஷயத்தை சொல்லும் வரைதான்.

Tuesday, January 10, 2012

நான் என்பதே நீயல்லவா - 13

"னக்கு மனைவினா அது கீர்த்தி மட்டும் தான் அதுவும் நீ, அத்த , மாமா சம்மதத்தோடுதான்" என்றவனின் குரலில் இருந்த உறுதியும் கீர்த்தியின் கண்களில் இருந்த உறுதியும் உத்ரா கண்களை பனிக்க செய்தன.

மனமோ எத்தகைய மனம் இவர்களுக்கு "ஆமா காதலிக்கறோம்,அதுல என்ன தப்பு? நீங்க சம்மதிச்சா மண்டபத்துல கல்யாணம் இல்லைனா Register officeல கல்யாணம் " என்று சொல்லும் இந்த தலைமுறையில் " காதலிக்கறோம் ஆனா நீங்க சம்மதிச்சா தான் எங்க கல்யாணம்" என்று சொல்லும் இவர்களை நினைத்து நெகிழ்ந்தது.உள்ளம் உவகையுற கண்களில் நீரோடும் உதட்டில் சிரிப்போடும்

"எப்போ கல்யாணம் னு தானே கேட்டேன், எப்படி காதலிக்கலாம்னா கேட்டேன்?" என்றாள்.

முதலில் உத்ரா சொன்னதை புரிந்துகொண்டு குதுகலித்து விக்கிக்கும் கீர்த்திக்கும் தன் மனம்நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்தது விஜி தான்.காதல் வென்ற மகிழ்ச்சியில் அனைத்தையும் மறந்து பழைய விஜியாய் மாறி இருந்தாள் அந்நேரம். விக்கிக்கும் கீர்த்திக்கும் இன்னும் ஒன்றுமே புரியவில்லை எதற்காக வாழ்த்துகிறாள் என்பது கூட புரியாமல் அமர்ந்திருந்தனர்.அதை பார்த்த விஜி சிரித்தபடி உத்ராவிடம்

"ஏய் லூசு பாரு நீ குடுத்த ஷாக்ல ரெண்டுபேரும் எப்படி உட்காந்திருக்காங்கனு, ஒரு நிமிஷம் எல்லோரையும் எப்படி கலங்கடிச்சுட்ட? குரங்கே" என

உத்ராவின் கண்கள் வியப்பையும் ஏக்கத்தை ஒருங்கே பிரதிபலித்தன. "எத்தனை நாளாயிற்று நீ இப்படி என்னிடம் பேசி" என்ற கேள்வியை கண்களின் வழியே கேட்டாள். அவள் அதை பார்த்தால் தானே சந்தோஷத்தில் அவள் அதை படிக்கவில்லை இவர்கள் இருவரை தான் பார்த்து கொண்டிருந்தாள்.சந்தோஷம் மிகுதியாக விக்கி,கீர்த்தியை பார்த்து வாய்விட்டு சிரித்தாள்.அவளின் சிரிப்பும் விஜியின் கேள்வியும் இவர்களுக்கு உத்ரா சொன்னதை உணர்த்த இருவரும் விவரிக்க முடியாத சந்தோஷத்தில் இருந்தனர்.கீர்த்தி உத்ராவின் தோளில் சாய்ந்து

"அக்கா தாங்க்ஸ் டி பயந்துட்டேன் தெரியுமா?" என்றாள்.

"அப்படியா நீயா பயப்படுவ? பக்கதுல நான் இருகேனு ஒரு பயமே இல்லாம என்னமா லுக்கு விட்ட இப்ப பயந்துட்டேன் சொன்னா நம்பிடுவேனா?"

" ச்சீ போடி " வெட்கபட விஜி உத்ராவும் கை தட்டி விக்கிக்கு கை கொடுத்து ஆரவாரபடுத்தினர்

"விக்கி நீ ஜெய்ச்சுட்ட போ கீர்த்தியவே வெக்கபட வைச்சுடயே பெரிய ஆளு டா நீ" என்றாள் உத்ரா.கீர்த்தி அவளை முறைக்க விக்கியும் விஜியும் சிரித்தனர் .

"முறைக்காதே தாயே விக்கி ஒரு லுக் விடு அமைதியாகிடுவா" என அதற்கும் சிரிப்பலை அடித்தது அங்கு.சூழ்நிலை இலகுவாக விக்கி கீர்த்தி இருவரும் உத்ராவிற்கு நன்றி கூறினர்.காலையில் அவளும் மல்லிகார்ஜுனும் பேசி கொண்டதன் பின் பகுதியை மட்டும் விளக்கி கூறினாள்.

விக்கியின் மனம் நெகிழ்ந்தது காதலிப்பவர்களை தவறு செய்பவர்களாய் பார்க்கும் இந்த காலத்தில் தங்கையின் காதலுக்காக அன்னை தந்தையிடம் பேசும் தமக்கையையும், மகளின் காதலை கண்டும் கோபம் கொள்ளாமல் சேர்த்து வைக்க நினைக்கும் பெற்றோரையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. தனக்கு எந்த தைரியத்தில் பெண் குடுக்க முன் வருகிறார்கள்'யாருமில்லாத ஒருவன் வேலையிருக்கிறது ஆனால் சேமிப்பு ஏதுமில்லை சொந்தங்கள் கூட இல்லை பின் எப்படி' என்று தோன்றியது அவனுக்கு.மறைக்காமல் அதை கேட்டும் விட்டான்.உத்ரா புன்னகைத்து

"எனக்கு என் நண்பனிடத்தில் உள்ள நம்பிக்கை தான் காரணம், அம்மா அப்பா கு எப்படினு தெரியல ஆனா என்னோட guessing அப்பாவும் அதே நம்பிக்கைல தான் சரினு சொல்லிருக்கனும்.மீதிய நீயே கேட்டு தெரிஞ்சுக்கோ" என்றாள் ஒரே சென்டிமென்ட் காட்சி ஒடி கொண்டிருக்க விஜி

"சப்ரைஸ்னு சொன்னது இது தானா?"

"அ........ஆ....ஆமா, விக்கி நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே" பேச்சை மாற்றினாள்.

"என்ன கேட்ட?"

"எப்போ கல்யாணம்?"

"கீர்த்தி படிப்பு முடிஞ்சதுக்கப்பறம்"

"ம் ........ம்....... சரி கீர்த்தி எப்படியாவது இந்த செமஸ்டரோட தொல்லைகெல்லாம் ஒரு முற்று புள்ளி வைக்கலாம்னு பார்த்தா விடமாட்ட போல" என்றாள் விஜி

"அதெல்லாம் இல்ல நான் படிக்கனும்னு தான் நினைக்கறேன்" என்றாள் கீர்த்தி

"ஆனா, பாவம் டா நீ" என்றாள் உத்ரா சோகத்தோடு

"ஏன் டி"

"பின்ன காலைல 8.00 மணிக்கு பெட் காபியோட எழுப்பினா தான் இவ எழுந்தரிப்பா, அதுமட்டும் இல்ல சுடுதண்ணி, காபி இந்த மாதிரி பெரிய வேலை மட்டும் தான் அவளுக்கு செய்ய தெரியும் , சம்பார், சாப்பாடுனு சின்ன வேலையெல்லாம் தெரியாது"

"அதுனால என்ன நான் காலைல எழுந்து காபி போட்டு அவள எழுப்பிட்டு போறேன்.. அவளுக்கு சமையல் தெரியாட்டி என்ன? நான் செஞ்சுட்டு போறேன்" என விஜியும் உத்ராவும் சேர்ந்து ஒரு கரகோஷம் எழுப்பினர்.

"இப்பவே பாதி பொண்டாடி தாசானா மாறிட்ட டா கல்யாணத்துகப்பறம் கீர்த்திதாசன் பேர மாத்திகூட வைச்சுக்குவ போல" என்றாள் விஜி

"இப்பவே அத செய்லாம்னு இருகேன்" என இருவரும் சிரிக்க கீர்த்தி அவனை முறைத்து

"போதும் போதும் ரொம்ப வழியுது" என்றாள்.

"அழகு தானே செல்லம்"

"ம்........ இது வேறயா ஆசை தான் , முகத்த கண்ணாடி பார்கறதேயில்ல போல"

"தினமும் பார்கறனே நீ மன்மதன் னு தான் சொல்லுது கண்ணாடி"

"சொன்னாங்க சொன்னாங்க"

"யாரு அந்த பக்கத்து சீட் ல உட்காருந்திருக்கே அந்த மாதவி பொண்ணு தான" என்று சுட்டிகாட்டினான்.

"ஓ ...... அதுகுள்ள பேரெல்லாம் தெரிஞ்சுகிட்டாச்சா?"

"ம்........ அந்த பொண்ணு தான் சொன்னுச்சு"

"வேறயென்ன சொன்னா அவ?"

"நான் ரொம்ப அழகு........ என்ன எப்பவும் பாத்திகிட்டே இருக்கலாம்னு சொன்னா அதுமட்டுமா எப்ப கல்யாணம் பண்ணிகலாம்னு? வேற கேட்டா சொல்லு நான் என்ன சொல்லட்டும்"

"ஏன் சரினு சொல்லுங்களேன்...... எனக்கேன்ன?" சொல்லி முடிப்பதற்குள் தொண்டை அடைக்க கண்களில் குளம்கட்டியது. அவளருகில் நெருங்கி அமர்ந்தவன்

"ஏய் சும்மா வம்பிழுத்தேன் டா இதுக்கு போய் அழலாமா?..........ம்....... கண்ண துடச்சுக்க டா....... உன்ன தவிர நான் யாரயாவது பார்பேனா "


"இல்ல பார்த்து தான் பாருக்களேன்?" என இருவரும் ஒன்று சேர்ந்து சிரித்தனர். இருவரும் நிமிர்ந்தால் விஜியையும் உத்ராவையும் காணவில்லை எங்கே போனார்கள் தேடினர் சிறிது நேரத்தில் இருவரும் ஐஸ்கிரீமுடன் வந்து சேர்ந்தனர்.

"எங்க டி போனிங்க?"

"இல்ல பா நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தீங்க அதான் நாங்க அப்படியே நடந்துட்டு வந்தோம் அப்பறம் தனியா பேசவிடறாங்களா பாருனு மனசுக்குள்ள திட்டுவீங்க எங்களுக்கு தேவையா? என்ன உத்தி"

"அதானே" என அவளும் ஆமோதிக்க சிரித்தபடி அனைவரும் வீடுவந்து சேர்ந்தனர்.

Sunday, January 8, 2012

நான் என்பதே நீயல்லவா - 12

ன் நினைவுகளிலிருந்து மீண்டவள் அவர்களிருவரும் இன்னும் அப்படியே இருப்பதை பார்த்துவிட்டு இது வேலைக்காகாது(இந்த காதலிக்கறவங்க மட்டும் எப்படி தான் இப்படி உலகத்தையே மறந்துட்டு இருக்காங்களோ) என்று நினைத்தவள் மெல்ல விக்கியிடம் பேச்சு கொடுத்தாள்.

"விக்கி விஜி இன்னைக்கும் வரலயே உனக்கு இன்பார்ம் பண்ணாலா?"

"இல்ல எதுவும் சொல்ல டி, கூப்பிடவா?"

"ம் கூப்பிடேன்"

விக்கி அவளை செல்லில் அழைத்தான் சத்தம் பின் பக்கதிலிருந்து வர திரும்பினால் அங்கு விஜி அமர்ந்திருந்தாள்.அவளருகில் சென்ற உத்ரா

"ஏய் என்ன இது தனியா இங்க வந்து உக்காந்துட்ட?"

"இல்ல........ அது.......வந்து"

"என்ன டி இப்போ உடம்பு எப்படி இருக்கு?" என்றபடி தொட்டு பார்த்தாள்.அவளின் அக்கறை விஜியை என்னவோ செய்ய

"ம் சரியா போயிடுச்சு" என்றாள்.

"சரி வா அங்க போலாம்" அழைத்து சென்றாள்.

"சாரி டி அன்னைக்கு ............. எதோ கோவத்துல.........."

"விடு டி " அவள் காதில் ரகசியமாக

"இன்னைக்கு என் ஆபிஸ்க்கு வா டி உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு" என்றாள்.

"சரி"

விக்கி, கீர்த்தி, உத்தி முவரும் வளவளத்தபடி வந்தனர்.விஜி வாயே திறக்கவில்லை உத்ரா இதை கவனித்தபோதும் இன்றோடு இதற்குமுடிவு வரபோகிறது, இன்று ரிஷி இவளிடம் பேசிய பிறகு சரியாகிவிடுவாள் என்று அமைதியானாள். மாலை ரிஷியையும் விஜியையும் சந்திக்கவைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள். நினைத்ததெல்லாம் நடந்து விடுகிறதா என்ன?

விஜியின் மனநிலை வேறாக இருந்தது அவளது எண்ணம் ரிஷி உத்ராவை காதலிக்கிறான்(லூசு லூசு). தன் தோழிக்கு தன்னால் எந்த வித இடையூறும் வரகூடாது தனக்கு நிறைவேறாத காதல் தான் விரும்பியவனுக்காவது நிறைவேறட்டும் என்று நினைத்தாள்(பெரிய தியாகினு நினைப்பு மனசுக்குள்ள).ரிஷியை மட்டும் மறுபடியும் பார்க்ககூடாது என்று நினைத்திருந்தாள்.
நால்வரும் விடைபெற்று சென்றனர்.

அலுவலகத்தில் நுழைந்தவள் தன் காலை வேலைகளை முடித்துவிட்டு மணிபார்த்த போது மதியமாகிருந்தது ரிஷியை தேடினாள் அவன் அலுவலகத்தில் இல்லையென்று தெரிந்ததும் அவனது செல்லிற்கு அழைத்தாள். எடுத்தவன்

"சொல்லு உத்ரா"

"எங்கிருக்க ரிஷி?"

"பெங்களூர் ல"

"பெங்களூர் ல யா தீடிர்னு ஏன் அங்க போன?"

"அவசர வேலையாம் நம்ம ரமேஷ் attend பண்ணறதா இருந்தது அவனுக்கு தான் ஆக்சிடன்ட் ஆகி ஹாஸ்பிடல இருக்கானே அதான் வர வேண்டியதா போச்சு"

"ஒ ....... அப்படியா?"

"ஏன் என்னாச்சு?"

"இல்ல இன்னைக்கு உன்னையும் விஜியையும் மீட் பண்ண வைக்கலாம்னு நினைச்சேன்"

"அய்யோ போச்சா............. சரி சீக்கரம் வந்துடரேன் அவ எப்படி இருக்கா?"

"நல்லா இருக்கா பா கவல படாத"

"சரி சீக்கரம் வந்துடறேன்"

"சரி ..." இன்றோடு முடியும் என்று நினைத்தால் இப்படியாகிவிட்டதே என்று நினைத்தபடி செல்லை அணைத்தாள் சரி சீக்கரம் சரியாகிவிடும் அதற்குள் நாம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்துக்கொண்டாள்.வேலையில் கவனத்தை திருப்பினாள்.அவளுக்கு என்னவென்றால் விஜி ரிஷியை காதலிக்கிறாளா என்று உறுதிபடுத்தி ரிஷியிடம் சொல்லியாயிற்று இதற்கு மேல் காதலர்கள் இருவரும்தான் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும், காதலர்களுக்கு இடையில் நாம் செல்லகூடாது என்ற எண்ணம் அவளுக்கு.

மாலையில் விக்கி,கீர்த்தி,விஜி முவரும் உத்ராவின் அலுவலகத்துக்கு வர நால்வருமாய் சேர்ந்து ஒரு restaurant ற்கு சென்றனர்.உத்ரா ஒரு பக்கம் கீர்த்தியும் மறுபக்கம் விஜியையும் அமரவைத்துகொண்டாள்.விக்கி இவளுக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்தான்.தங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்துவிட்டு அன்றய தினத்தை பற்றி பேசிகொண்டிருந்தனர்.விஜி மன தடுமாற்றத்திலிருந்தும் கவலையிலிருந்து அவளது முடிவின் விளைவால் சிறிது தெளிந்திருந்தாள்.சிறிது தான் அதனால் முன் போல் இல்லாவிட்டாலும் சகஜமாகவே பேசிகொண்டிருந்தாள். எப்படி ஆரம்பிப்பது என்று சிறிது யோசித்துவிட்டு பின் மெல்ல விக்கியிடம்

"அப்பறம் எப்ப டா கல்யாணம் ?" என்றாள் உத்ரா

தீடீர் கேள்வியில் புரியாதவன் "யார் கல்யாணம்?" என்றான்.

"உன் கல்யாணம் தான் டா"

"அதுக்கு இப்ப என்ன அவசரம் ஒரு முனு வருஷம் போகடும்" கீர்த்தியை பார்த்தபடி

"அது வரைக்கும் இப்படியே நீயும் கீர்த்தியும் ஒருத்தரஒருத்தர் சைட் அடிச்சுகிட்டு இருக்க போறீங்களா?"

அவள் கேட்டதும் அங்கிருந்த முவருக்கும் அதிர்ச்சி கீர்த்திகோ பயமும் அதிர்ச்சியும் கலந்து தோன்றியது அத்தோடு உத்ராவை பார்த்தாள்.உத்ராவின் முகதில் என்ன இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.விஜி தான் முதலில் தெளிந்து அவள் காதில்

"என்ன டி இது?"

"என்ன நடக்குதுனு பாரு" மெதுவாக சொல்லிவிட்டு , சத்தமாக " ரெண்டு பேரும் காதலிக்கறாங்க யாருக்கும் தெரியாம"

"உத்ரா ............... வந்து .......நீ ......... நினைக்கறமாதிரி .......இல்ல" என்றான் விக்கி

அதற்குள் கீர்த்தி அவசரமாக " அக்கா அப்படியெல்லாம் இல்ல .... கா ப்ளிஸ் கா" என்றாள்

"எப்படி இல்ல நீ விக்கிய காதலிக்கல...."கீர்த்தியிடம் கேட்டாள்.

கீர்த்தி விக்கியை பார்க்க அவன் என்னை ஏமாற்றிவிடாதே என்பது போல் கண்களால் கெஞ்சினான். என்ன செய்வதென்று அறியாதவள் அமைதியாயிருந்தாள்.

"சொல்லு நீ இவன லவ் பண்றயா இல்லயா?" சற்று காட்டமாகவே கேட்க கீர்த்தி தலையாட்டிவிட்டு குனிந்துகொண்டாள்.

விக்கி அவளை காதலோடு பார்த்தான் பின் முடிவுக்குவந்தவனாய் உத்ராவின் கண்களை நேராய் பார்த்து

"உத்ரா இப்ப தான் அவ சொல்லுறா அவளும் என்ன லவ் பண்ணறானு, நானும் அவள நேசிக்கறேன் உயிரா நேசிக்கறேன், இப்ப தான் நாங்க எங்க love அ வெளிபடுத்தறோம், நீ நினைக்கற மாதிரி தெரியாம லவ் பண்ணறது எல்லாம் கிடையாது." சிறிது இடைவெளி விட்டு பின் "ஆனா எனக்கு மனைவினா அது கீர்த்தி மட்டும் தான் அதுவும் நீ, அத்த , மாமா சம்மதத்தோடுதான் அதுவரை நாங்க காத்துகிட்டு இருப்போம்" என்று அழுத்ததோடும் உறுதியோடும் சொன்னான் கீர்த்தியின் கண்களிலும் அதே உறுதி இருந்தது.

Wednesday, January 4, 2012

நான் என்பதே நீயல்லவா - 11

பொழுது முழுவதுமாக புலராத அதிகாலை நேரம் அந்த மார்கழி மாத குளிரிலும் தன் குஞ்சுகளின் பசி மிகுந்த குரல் கேட்டு"இதோ நான் கிளம்பிவிட்டேன்" என்று பலவிதமான பறவைகள் தத்தம் இனிய குரலில் அறிவித்தபடியே சென்றன அதை கேட்ட மனிதர்களும் "இதோ நாங்களும் கிளம்பபோகிறோம்" என்றபடி ஆங்காங்கே வேக நடையிட்டு சென்று கொண்டிருந்தனர்.ஈர பதத்தோடு வீசிய காற்றை தன் காதல் தூதுவனாக்கி வண்டுகளையும், தேனீகளையும் சீக்கிரம் வர சொல்லி செய்தி அனுப்பின பூக்கள்.அவைகளும் "செய்தி கிடைத்தது கண்ணே இதோ வந்துவிட்டேன்" என்று ரீங்காரமிட்டபடி வந்து பூக்களிகளிடம் காதல் மொழி பேசின. இந்த இனிய இசையை கெடுக்க முயன்று ஒலித்தது பால்காரனின் ஹாரன்.அந்த சத்தமும் இசையாய் மாறிவிட தோற்று போய் ஒய்ந்தது. இந்த இனிய சூழலை தந்தையின் தோளில் சாய்ந்து ரசித்தபடியே நடந்தாள் உத்ரா.

சற்றுமுன் தனக்கிருந்த மனநிலையையும் இப்போதிருக்கும் மனநிலையையும் ஒப்பிட்டு பார்த்தாள்.இந்த மாற்றதிற்கு காரணமான தன் தந்தையை பெருமையோடு பார்த்து புன்னகைத்தாள் அவளின் எண்ணம் புரிந்தவர் காலரை தூக்கிவிட்டு சிரிக்க அவளும் வாய்விட்டு சிரித்தாள்.ஏதோ பேசியபடி வீடுவந்து சேர்ந்தனர்.இருவரின் முகம் பார்த்தவரின் மனம் நிறைய புன்னகைத்தார் சரஸ்வதி.அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அலுவலகம் கிளம்பினாள் உத்ரா.என்றுமில்லாத அதிசயமாய் சீக்கிரம் ரயில்நிலையம் வந்திருந்தனர் இருவரும் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தபடி கீர்த்தி கேட்டாள்.

"டைம் ஆச்சு டைம் ஆச்சுனு நான் காட்டு கத்து கத்தினா கூட கிளம்பமாட்ட இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கரம் கிளம்பிட்ட? ஆபிஸ்ல எதாவது விசேஷமா?"

"ம் இன்னைக்கு என்ன நாள்?......... சம்பள நாள் அதான் இத்தன ஜோர்"

"ஆமா ல மறந்துட்டேன் உத்தி..... எனக்கு என்ன வாங்கி தருவ?"

"என்ன வேணும்?னு சொல்லு வாங்கி தரேன்...."

"அப்ப சரி கேட்டுகோ.........." என்று குதுகலமாய் பட்டியல் வாசித்தாள் அதை கேட்டவளுக்கு தலைசுத்த

"என்ன டி இது?"

" இது இப்ப போதும் உத்தி அப்பறம் மீதிய வாங்கிகறேன்"

"நீ சொல்லுறத பாத்த என் சம்பளமே மிஞ்சாது போலவே, இதையெல்லாம் உன்ன கட்டிகபோறவன் கிட்ட வாங்கிக்க தாயே"

"அவர்கிட்ட கேட்க இன்னும் நிறைவச்சிருக்கேன் இதமட்டும் சொல்ல சொல்லுறயே..."

"பாவம் டி அவன்" சோகமாய் சொல்ல  இருவரும் வாய்விட்டு சிரித்தனர். கீர்த்திக்கு எதோ தோன்ற திரும்பினாள் கொஞ்சதூரத்தில் இவளையே பார்த்தபடி விக்கி வந்து கொண்டிருந்தான்.உதட்டை கடித்து வெட்கத்தால் சிவந்த கன்னங்களை சரி செய்ய முயன்று முடியாமல் தலைகுனிந்தாள். அதை பார்த்த உத்ரா அவள் கண் சென்ற திசை பார்த்துவிட்டு பார்காதது போல் திரும்பிகொண்டாள்.அருகில் வந்த விக்கி

"அப்படியென்ன சிரிப்பு என்கிட்ட சொன்னா நானும் சிரிப்பேன்ல"

"கீர்த்தி லிஸ்ட் கேட்டு தான் இந்த சிரிப்பு"

"என்ன லிஸ்ட்?"

"இன்னைக்கு சம்பள நாள் இல்ல அதுக்கு தான்"

"ஓ.......... உத்தி எனக்கு டிரிட் இல்லயா?"

"உங்க ரெண்டுபேருக்கும்............. ஒரு...... ஸ்பெஷல்ல்ல்ல்ல்ல் டிரிட் இருக்கு" என்று தலைசாய்த்து கண்சிமிட்டி கள்ள சிரிப்போன்றை உதிர்த்தாள்.அதை இருகண்கள் படமெடுத்து பத்திரபடுத்தியது.

"என்ன ட்ரிட்?"

"சாய்ந்தரம் ரெண்டுபேரும் என் ஆபிஸ் வந்துடுங்க, கீர்த்தி நான் அப்பா அம்மாகிட்ட நான் சொல்லிடேன் காலேஜ் முடிஞ்சதும் வந்திடு சரியா?"

" சரி"

"சரி" ரயில் வர ஏறியமர்ந்தனர்.ரயிலில் இன்று கூட்டம் அதிகமில்லை முவருக்கும் அமர இடம் கிடைத்தது.உத்ரா ஜன்னலோரத்திலும் அவள் அருகில் கீர்த்தியும், கீர்த்திக்கு நேரெதிராய் விக்கியும் அமர்ந்திருந்தனர். இருவரும் கண்ணோடு கண்பார்த்திருக்க இதை காணமல் கண்டுவிட்டு பார்வையை ஜன்னலின் வெளியே திரும்பினாள் உத்ரா.சில்லேன்ற காற்று முகத்தை தழுவி சென்றது.காலையில் தனக்கும் தன் தந்தைக்கும் நடந்த உரையாடலை நினைவுகூர்ந்தாள்.

காலையில் குழம்பிய முகத்தோடு வந்தவளை எதிர்பார்திருந்தது போல் தயாராயிருந்தார் மல்லிகார்ஜுன் இருவருமாய் நடக்க ஆரம்பித்தனர்.நிலவிய அமைதியை கலைத்த மல்லிகார்ஜுன்

"என்னமா பிரச்சனை?"

சிறிது நேரம் மவுனம் காத்துவிட்டு பின் ரிஷி - விஜி விஷயத்தை முழுவதுமாய் உரைத்தாள்.

"நான் செஞ்சது சரியா பா?"

"சரிதான் . விஜி ரிஷிய லவ் பண்றது நல்லா தெரியுது , ரிஷி வந்து பேசினா விஜி சரியாகிட போறா அப்பறமென்ன? "

"இல்ல பா எனக்கென்னா அத்தையும் மாமாவும் இதுக்கு சம்மதிப்பாங்களா?னு தெரியாம நான் அவள காதலிக்க தூண்ட்டனே னு இருக்கு"

"அப்படியேல்லாம் நினைக்காத கண்ணன எனக்கு தெரியும் உங்க ப்ரண்ஷிப் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே கம்பனிங்கள்ள பார்த்திருக்கோம் பொண்னோட விருப்பத்துக்கு தடை சொல்ல மாட்டாரு தவிர பையனும் நல்லவன் தானே?"

"நல்லவர் தான் பா அதுனால தான் நானும் அவங்கள மீட் பண்ண வைச்சேன்"

"இருந்தாலும் நான் எதுக்கும் விசாரிக்க சொல்லறேன், கண்ணன் கிட்டவும் பேசறேன் சரியா? நீ மனச போட்டு குழப்பிகாத" இன்னும் அவள் முகம் தெளிவடையாததை கண்டு

"இன்னும் வேற எதோ கூட இருக்கு போல என்னனு சொல்லு"

"என்னோட ஆபிஸ் ப்ரண்ட் ஒருத்தியோட தங்கச்சி அவளோட ப்ரண்ட் அ லவ் பண்ணறாளாம், நல்லவனாம் ஆனா அப்பா-அம்மா சம்மதிப்பாங்களானு தெரியல இப்ப என்ன பண்ணறது னு எங்கிட்ட கேட்டா பா"

"விக்கி னா  எனக்கு சம்மதம்" விழிவிரித்து தன் தந்தையை பார்த்தாள்

"என்ன இவனுக்கு எப்படி தெரியும்னு பாக்கறீயா?"

"............."

"நானும் கீர்த்திய பார்த்துகிட்டு தானே இருக்கேன், அவ வயச கடந்து தான வந்திருகேன் எனக்கு தெரியாதா? தவிர எங்களுக்கு தெரியாம உனக்கு அவளோட அந்தரங்கள்ல சொல்லகூடிய அளவு deep friend யாரு இருக்க போறா அப்படி இருந்தா நீ சொல்லிருப்பயே உன் தங்கச்சி விஷயத்தையே உன்னால மறைக்க முடியலயே, அதவைச்சு தான் guess பண்ணேன் உன் கண்ணு கரக்டுனு சொல்லிடுச்சு"

தன் தந்தையின் புத்திகூர்மையை நினைத்து வியந்தவள்" அப்பா நான் பயந்துட்டேன் நீங்க என்ன சொல்லுவீங்களோனு"

"எதுக்கு பயம் நானும் உங்க அம்மாவும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிகிட்டோம் எங்க பிள்ளைங்க காதலுக்கு மட்டும் தடை சொல்லிடுவோமா என்ன"

"Thanks you பா "

"இந்த thanks கீர்த்தி லவ்க்கு ஒகே சொன்னதுக்கா இல்ல உன் லவ் க்கும் ஒகே சொல்லுவேன் ங்கறதுனாலயா?"

"அப்பா...... எனக்கு அப்படி எண்ணம் இல்ல நீங்க யார சொல்லுறீங்களோ அவனுக்கு கழுத்த நீட்டிடுவேன்"

"அப்ப பாக்க ஆரம்பிச்சுட வேண்டியது தான்"

"அய்யோ அப்பா நான் இப்ப தான படிச்சு முடிச்சிருக்கேன் அதுகுள்ள எதுக்கு?"

"அதான் முடிச்சுடியே"

"கல்யாணத்துக்கு நான் இன்னும் mentally ரெடியாகல பா"

"சரி எப்ப ரெடி ஆவ?"

"அதெப்படி சொல்ல முடியும்"

"ஒன்னு செய்யலாம் இப்போ exam date fix பண்ணிடாங்கனு வை நீ உன் மனச அதுகாக ரெடி பண்ணிகுவ இல்ல அதுமாதிரி நாங்க கல்யாண தேதி fix பண்ணறோம் அதுகாக நீ உன் மனச ரெடி பண்ணிகோ சரியா?"

"ஆனா எப்படியும் convince பண்ணிடுவீங்க பா"

"அது தான எங்க வேல நல்லத convince பண்ணிகொடுக்கறதும் கெட்டத எப்படியாவது தடுக்கறதும் எங்க கடமை இல்ல யா"

பெருமையாக உணர்ந்தாள்.வீட்டிற்கு வந்து தன் தாயிடம் இதுபற்றி பேசினாள் அவரும் இதற்கு சரியேன்று விட துள்ளாத குறையாய் சந்தோஷித்தாள் கூடவே பெருமிதமும்

" I proud to be your child " என்றாள்

"நாங்க தான் பெரும படனும் எங்களுக்காக காதல மறைக்கறா ஒருத்தி, தங்கையோட காதலகூட அப்பா அம்மாகிட்ட பகிர்ந்துகறா ஒருத்தி இப்படி ரெண்டு பிள்ளைங்கள் பெற்றதுக்கு நாங்க தான் பெருமைபடனும் டா"என்று அணைத்து கொண்டனர்.

பாசம்தான் மனிதனை மனிதனாக இருக்க வைக்கிறது ஆனால் அது சில சமயங்களில் சிக்கலிலும் மாட்டிவிட்டுவிடுகிறது.இவர்களி
ன் பாசம் என்ன செய்ய போகிறது பார்போம்.