நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Friday, September 9, 2011

தங்கை

வியந்தேனடி உன்னை கண்டு
அன்பே அரவனைகையில் அன்னையாகிறாய்
தட்டி கொடுத்து பாராட்டுகையில் தந்தையாகிறாய்
விட்டு கொடுத்து  போகையில் தமக்கையாகிறாய்
முட்டி கொண்டு நிற்கையில்  தங்கையாகிறாய்
தோள் சாய்கையில் தோழியாகிறாய்
இன்னும் எத்தனை பரிமாணங்கள் தான் உள்ளது
உன்னிடம்? இது மட்டுமா ?
தண்டனைக்கு தான் முதல் என்பாய்
மற்றவை தமக்கை முதல் என்பாய்
உண்மை உரைக்கிறேன் வயதில் மட்டும்
தானடி நான் உன்னை விட பெரியவள்
மனதிலும், குணத்திலும் என்னை விட
பெரியவள் நீயே
 


 



No comments: