நண்பா,
உன் முகம் கண்டதில்லை,
உன் குரல் கேட்டதில்லை,
கணினியின் திரையில் - உன்
எழுத்துகளை கண்டதும் - என்
முகத்தில் ஒரு பிரகாசம்
இதுதான் நட்பின் மகத்துவமோ?
உலகத்தை பற்றி அறிய வேண்டும்
என்று கூறி செய்திகள் படிக்க அறிவுருதினாய்,
நல்லதுகள் பலவும் - நீ
கற்றுகொடுதாய்,
பொதுஅறிவு கேள்விகள் கேட்டு
என் அறிவை வளர்த்தாய்,
இன்னும் எத்தனையோ செய்தாய்,
நீ செய்ததற்கு நன்றிகள் கூறி - உன்னையும்
நட்பையும் இழிவுபடுத்த விரும்பவில்லை
என் உயிர் நிலைக்கும் வரை - என் மனதில்
என்றும் உயர்ந்த இடத்தில நீ இருப்பாய்.
No comments:
Post a Comment