ஐந்து மணிக்கு எழுந்து புத்தகம் எடுத்து
ஆறுமணிக்கு குளித்து - அன்னையிடம்
திட்டுவாங்கி தலைசீவி சாப்பிட்டு பைதூக்கி
பள்ளி செல்வதற்குள் மணியாகும் ஓன்பது
பள்ளி சென்று உற்ற தோழியிடம்
காலை நடந்த கதை தனை
உரைத்து கலகலவென நகைத்து
கலைத்திடுவோம் கவலைகளை
ஆசிரியரிடம் ஆசிபெற்று - சில சமயம்
அடியும் பெற்று - அத்தனையும்
அப்பொழுதே மறந்து மீண்டும்
துவங்கும் எங்கள் குறும்பு
நினைத்ததை நினைத்தபடியே பேசி
நில்லாமல் கால்கடுக்க ஓடிய நாட்கள்
அடுத்தவர் உள்ளம் மட்டுமல்ல
கள்ளமும் அறியா அந்த காலம்
திரும்பாத இனிய பள்ளி காலம்
திரும்பிடவே வரம் கேட்டு கடவுளிடம்
ஏங்கி நிற்குது இந்த பேதை மனம்.
No comments:
Post a Comment