நண்பர்கள் இருந்தால் உலகையே வெல்லலாம்

Friday, August 12, 2011

தந்தை

அப்பா,
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு
இந்த ஒரு வார்த்தையில்,
ஈன்ற பொழுதிலிருந்து நீங்கள் எனகளிக்கும் அன்பு
உலகம் வியக்கும் படியான
ஊர் புகழும் படியான முன்னேற்றதிற்கு
என்னை எடுத்து செல்லும்
ஏணி படிகள் - அவரது
ஐம்புலனும் எனக்காகவே
ஒன்றினைந்து செயல்படும் - நான்
ஓங்கி உயர ஒய்வுல்லாமல் பாடுபடும்
இத்தனை செய்தும் சொல்வார்" நான்
என்ன செய்தேன் என் பிள்ளை தான்
கஷ்டபட்டாள்". இன்னும் ஓராயிரம் இருக்கிறது
தந்தையே! நின் புகழ் கூற - அந்த 
தமிழன்னை மட்டும் ஒத்துழைத்தால் போதும்
தந்தையர் புகழ் பாடிடுவேன் தினமும்.

No comments: