அன்பாய் அண்ணா என்று அழைக்க
அதுவே மிகுதியாகையில் "டா" என்று உரிமையோடு அழைக்க
சிறுவிரல் பிடித்து நடக்க வைக்க
என் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளிக்க
சமத்தாய் பள்ளி அழைத்து செல்ல
சிறுவயதில் மிட்டாய் வாங்கிதர அண்ணன் இல்லையேன்ற வருத்தம் தீர்க்க
எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பதில் உதவ
பெண்பிள்ளைகள் தானே என்ற சொந்தங்களின் ஏளனத்தை தகர்க்க
இன்னொரு தாயாய் தங்கை இருக்க
தந்தையின் மறு உருவாய் நீ ஏன் பிறக்காமல் போனாய்?