காலையில் கீர்த்தியின் வீட்டிற்கு விக்கி வந்திருந்தான்.வாசல் வரை வந்தவனால் முன் போல் குரல்கொடுத்துவிட்டு உள்ளே செல்ல முடியவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது தயங்கி நின்று கொண்டிருந்தவனை உத்ரா பார்த்துவிட்டாள்.தயக்கத்தை போக்கும் விதமாய்

"வாங்க மாப்பிள்ளை சார்........ உள்ளே வாங்க......" என்றழைத்தாள். தன்னை கிண்டல் செய்வது புரிந்து மெல்ல சிரித்து தயக்கத்தோடே உள்ளே வந்தான்.

"அம்மா........அப்பா......... யாரு வந்துருக்காங்க பாருங்க...." என்று உள்ளே குரல் கொடுத்தாள்.இவள் குரல் கேட்டு வெளியே வந்த தந்தையிடம் கண்ணடித்து சைகை செய்தாள்.புரிந்து கொண்டவராய்

"அடடே ......... மாப்பிள்ளை .... வாங்க மாப்பிள்ளை....... எப்படி இருக்கீங்க? " என்றார்.

"மாமா என்ன இது?......." இதையெல்லாம் கேட்டுகொண்டே கையில் காபியோடு வெளியே வந்த சரஸ்வதி அவர் பங்குக்கு

"வாங்க மாப்பிள்ளை ....... இந்தாங்க எடுத்துக்கோங்க.." என்று காபியை அவனுக்கும் மல்லிகார்ஜுனுக்கும் கொடுத்தார்.

"என்ன அத்த நீங்களுமா?......எதுக்கு இந்த திடீர் மரியாதை எல்லாம்?"

"என்ன பண்ணறது எங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறவராச்சே....... மரியாதை கொடுக்கலனா கோவிச்சுக்க மாட்டீங்க......"

"மாட்டேன்... நீங்க பெயர் சொல்லி குப்பிடலனா தான் கோவிச்சுக்குவேன்....."

"அம்மா கூப்பிட்டுடு மா ....... இல்லனா கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லிட போறாரு........" என அதிர்ச்சியோடு உத்ரா சொல்ல அப்போது தான் அங்கு வந்த கீர்த்தி உட்பட அனைவரும் நகைத்தனர்.

"அதுக்கு ஏன் டி இப்படி அலறுற....... என்ன கல்யாணம் பண்ணிக்க வேற ஆளா கிடைக்க மாட்டாங்க..." என்று விக்கியை பார்த்தபடியே சொன்னாள் கீர்த்தி.

"மாட்டாங்கனு தான பயபடுறேன்.... இந்த மாதிரி இளிச்சவாயன நான் எங்கனு போய் தேடுறது......" விக்கியை கை காட்டி சொல்ல

"என்ன சொன்ன.......... நில்லு டி ஒடாத" தந்தையின் பின் ஒளிந்துகொண்டவளை பார்த்து " வந்துடு......நீயா வந்தினா பொழச்ச இல்ல அவ்வளவு தான்..... விடுங்க பா அவள..."

"விக்கி நல்லா யோசிச்சுகோ...........இல்ல.. தினமும் இப்படி தான் அடிவாங்கனும்........ "

"நீ சொல்லறது சரி தான் போலிருக்கு......... உத்தி...... கொஞ்சம் யோசிக்கனும்......"

"ஓ......... யோசிப்பீங்க..........." என்று அவனுக்கு ஒர் அடி வைக்க

"என் பொண்ணு என்ன குறைச்சல்......... என்ன கொஞ்சம் கை வாயும் அதிகம்....... அவ்வளவு தான்......." சரஸ்வதி சொல்ல

"அதுவும் என் பொண்ணுக்கு அழகுதான் தெரிஞ்சுக்கோ...... விக்கி...... நானேல்லாம் வாங்கறதில்லையா இதெல்லாம் லவ்வுல சாதாரணமப்பா......." என்று கண்ணடித்து மல்லிகார்ஜுன் சொன்னார்.

வரும் போதிருந்த தயக்கம் மறைந்து அங்கு அவனும் ஒருவன் என்ற எண்ணமே விக்கிக்கு மேலிட்டது.சந்தோஷமாய் முவரும் ரயில் நிலையம் வந்தனர்.இவர்களுக்காய் படபடப்புடன் காத்திருந்தாள் விஜி.ரயிலில் ஏறியதும் உத்ராவோடு தனியாய் அமர்ந்துகொண்டாள்.உத்ராவும் விஜியிடம் தென்பட்ட பதட்டத்தை பார்த்துகொண்டுதானிருந்தாள்.அவளாய் எதுவானாலும் சொல்லட்டும் என்று காத்திருந்தாள். அவள் வாய்திறக்காமல் இருக்கவே இவளே கேட்டாள்

" என்னடி வந்ததிலிருந்து எதுவுமே பேசமாட்டேங்கற?"

"ஒ.....ஒன்னுமில்ல டி, ஆமா ............. உனக்கும்....... சரணுக்கும்.......கல்யாணம்..." தயக்கத்தோடு

"ஆமா, அப்பா கேட்டாரு......." சற்று வெட்கத்தோடே

"நீ என்னடி முடிவு பண்ணீருக்க........."

"எனக்கு சம்மதம் டி......."கன்னம் சிவந்தது அவளுக்கு

"சம்மதமா?....... உண்மையா சம்மதமா டி ....... மனசார தான சம்மதிக்கற....?

"ஆமா டி அதிலேன்ன உனக்கு சந்தேகம்? எனக்கு சரண பிடிச்சிருக்கு...... எல்லாத்துக்கும் மேல நீ என்னோட நாத்தனாரா வரும் போது எனக்கு சம்மதமில்லாமலா போகும்......."

"...................."

"விஜி ....... உனக்கு இதுல இஷ்டம் இல்லையா டி........இல்லனா சொல்லு........நான் இன்னும் அப்பாகிட்ட எதுவும் சொல்லல....... வேண்டாம்னு சொல்லிடறேன்........" மெய்யான வருத்தோடு சொன்னாள்.

"ச்..ச..ச... என்ன டி நீ எனக்கு அண்ணியா வந்தா முதல்ல சந்தோஷபடற ஆள் நானாதான் இருப்பேன்...... எனக்கு இதுல ரொம்ப சந்தோஷம் டி.." இத்தோடு அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

இரவு முடிவு கேட்ட தந்தையிடமும் சம்மதம் என்றே கூறினாள்.பெற்றவர்கள் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. கடவுளே இந்த திருமணம் நல்லபடியே நடக்க அருள்புரி என்று வேண்டிகொண்டது........

ஆனால் இந்த கல்யாணம் நடக்குமா?..................................